ARTICLE AD BOX
300 கோடி வசூல்.. சங்கராந்திக்கி வஸ்துனாம் பட சக்சஸ் மீட்.. சூப்பர் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!
ஐதராபாத்: நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சௌத்ரி லீட்கேக்டர்களில் நடித்து கடந்த மாதம் 14ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது சங்கராந்திக்கு வஸ்துனாம். படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார்.பொங்கல் கொண்டாட்டமாக இவரது மற்றொரு படமான கேம் சேஞ்சர் படமும் வெளியான அந்தப் படம் வசூலில் சொதப்பியது.
இந்நிலையில் சங்கராந்திக்கு வஸ்துனாம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் இந்தப் படத்தின் வசூல் 300 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்கியுள்ள நிலையில் படத்தில் முன்னாள் காதலி மற்றும் மனைவிக்கு இடையில் சிக்கிக் கொண்டு முழி பிதுஙகும் கேரக்டரில் நடித்துள்ளார் வெங்கடேஷ்.
சங்கராந்திக்கி வஸ்துனாம் படம்: நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது சங்கராந்திக்கு வஸ்துனாம் படம். அனில் ரவிப்புடி இயக்கத்தில் தில் ராஜு இந்தப் படத்தை தயாரித்திருந்தார். காமெடி ஜானரில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று கடந்த இரு வாரங்களில் 300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. தில் ராஜு இயக்கத்தில் பொங்கலையொட்டியே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படம் சொதப்பிய நிலையில் வெங்கடேஷ் நடிப்பில் இந்தப் படம் மிகப்பெரிய வசூலை அவருக்கு கொடுத்துள்ளது.
காமெடி கலாட்டா: முன்னாள் காதலிக்கும் மனைவிக்கும் இடையில் சிக்கி முழி பிதுங்கும் கேரக்டரில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் வெங்கடேஷ். முன்னாள் போலீஸ் அதிகாரியான வெங்கடேஷ், கடத்தப்பட்ட தொழிலதிபரை காக்கும் ஆபரேஷனை கையிலெடுப்பதாகவும் இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. கதைக்கு அதிகமான முக்கியத்துவம் தராப்படாத நிலையிலும் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடினர். கேம் சேஞ்சர் படம் சிறப்பாக அமையாத நிலையில் சங்கராந்திக்கு வஸ்துனாம் படம் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தது.
300 கோடி வசூல்: இந்நிலையில் இந்தப் படம் கடந்த இரு வாரங்களில் 300 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான கலெகஷனை பெற்றுள்ளதை படக்குழுவினர் கொண்டாடி தீர்த்துள்ளனர். இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜுவும் கலந்துக் கொண்டனர். படத்தின் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர். மேலும் இவர்கள் அனைவரும் இணைந்து படத்தின் பாடலுக்கு சூப்பர் குத்தாட்டம் போட்டனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.
கமர்ஷியல் இயக்குநர்: மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குநராக வலம்வருகிறார் அனில் ரவிப்புடி. தன்னுடைய இறுதிப்படத்திற்கு இவரை இயக்குநராக்க விஜய் விரும்பியதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் அந்த அளவிற்கு கமர்ஷியல் ஹிட்களை கொடுத்து வருகிறார். சில லாஜிக் மீறல்களை சங்கராந்திக்கு வஸ்துனாம் படத்தில் பார்க்க முடிகிறது. காமெடியை மட்டுமே பிரதானமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். இருந்தபோதிலும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் காணப்படுகிறது.