ARTICLE AD BOX

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே மெகா தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த எபிசோடின் கதைச்சுருக்கம் இதுதான்.
அன்பு ஆனந்தியுடனான காதலை மகேஷிடம் வார்டன் எடுத்துச் சொல்லியும் அவன் நம்பவில்லை. மகேஷின் அப்பா எடுத்துச் சொல்லியும் நம்பவில்லை. காரணம் அனபுவை மகேஷ் உடன்பிறவா சகோதரனனாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறான். இதனால் சிக்கல் யாருக்கு என்றால் வார்டனுக்கும், ஆனந்தி, அன்பு ஆகியோருக்கும் தான்.
இப்போது வார்டன் என்னால் தானே ஆனந்தி உனக்கு இவ்ளோ பிரச்சனை? இதுக்கு நானே முற்றுப்புள்ளி வைக்கிறேன். உங்க ஊருக்குப் போய் உங்க அம்மா, அப்பாவிடம் சொல்லி விட்டு வருகிறேன் என்று கிளம்பரத் தயாராகுகிறாள். அதே நேரம் இந்தப் பிரச்சனை அன்புவின் அம்மாவுக்கும் தெரிய வருகிறது. அவளோ படபடவென வெடிக்கிறாள்.
இவ்ளோ பிரச்சனையை ஏன் எங்கிட்ட இருந்து மறைச்சீங்கன்னு கேட்கிறாள். இனியும் இந்தப் பிரச்சனையை வளர விடக்கூடாது. நானே ஆனந்தியின் அம்மா, அப்பாவிடம் போய் பேசுகிறேன். என்னோடு வான்னு அன்புவை அழைக்கிறார். அதே நேரம் ஆனந்தி இதெல்லாம் வேணாம். அப்பாவுக்கு மட்டும் புரிய வைத்தால் போதும். அவரே ஒத்துக்கொள்வார்.
அப்புறம் அவரே மகேஷிடமும் பேசிவிடுவார் என்கிறார் ஆனந்தி. அன்புவின் அம்மாவும் அன்புவோடும், ஆனந்தியோடும் சேர்ந்து கிளம்பத் தயாராகுகிறாள். அதே நேரம் மகேஷ் இனி என் பையன், ஆனந்தி காதலுக்கு இடையில் குறுக்கே வந்தான்னா நான் சும்மா விட மாட்டேன்னும் கடிந்து கொள்கிறாள்.

அதே நேரம் வார்டன் மகேஷின் அப்பாவிடம் பேசி அவரையும் சேர்த்து ஆனந்தியின் பெற்றோரைப் பார்க்க அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்கிறார். ஏன்னா ஆனந்தியின் அப்பா முதலில் மகேஷூக்குத் தான் நான் பொண்ணைக் கட்டிக் கொடுப்பேன்னு குடிகாரனான முறைமாமன் சுயம்புலிங்கத்திடம் கோபமாக பேசி இருந்தார்.
ஆனாலும் என் பொண்ணையும் ஒரு வார்த்தைக் கேட்கணும்னு மகேஷிடம் சொல்லி இருந்தார். இப்போது வார்டன் மீண்டும் அவரிடமே போய் அன்புவும், ஆனந்தியும் காதலிக்கிறார்கள். அதனால் மகேஷூக்குப் பொண்ணைக் கட்டிக் கொடுக்காதீங்கன்னு சொல்லப் போகிறார். இனி நடப்பது என்ன என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.