ARTICLE AD BOX
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஒரு பெண்ணுக்கு இரண்டு அம்மாக்கள் சண்டைப் போடும் நிலைமை வந்துவிடும் போல. இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் என ஒரு முக்கோண காதல் கதை காட்டப்படுகிறது. அன்பு தான்தான் அழகன் என்று சொல்லாமல் ஆனந்தியை காதலித்து வந்தார். அதேபோல் மகேஷும் ஆனந்தியை காதலிக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அன்புதான் அழகன் என்பது ஆனந்திக்கு தெரிய வந்தது. அதுமுதல் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் காதலித்து வருகிறார்கள்.
முதலில் அன்பு அம்மாவுக்கு ஆனந்தியை கண்டாலே பிடிக்காது. ஆனால், இடையில் அன்பு அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில், ஆனந்தி நன்றாகப் பார்த்துக்கொண்டார்.
இது அன்பு அம்மாவுக்கு தெரியாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது அன்புவின் அம்மாவுக்கு தன்னை மருத்துவமனையில் இரவு நேரத்தில் பார்த்துக் கொண்டது யாழினி கிடையாது என ஞாபகம் வருகிறது.
உடனே யாழினியை கூப்பிட்டு அன்னைக்கு ராத்திரி நீ என் கூட ஆஸ்பத்திரியில் இல்ல சரிதானே என்று கேட்கிறார்.
இதனால், யாழினி உண்மையை கூற வாய்ப்பிருக்கிறது. அப்படித் தெரிந்தால், கட்டாயம் ஆனந்தி மீது நல்ல அபிப்பிராயம் வந்துவிடும்.
இப்படி அன்பு அம்மா ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மகேஷ் அம்மா ஆனந்தியை கட்டாயம் மகேஷுக்கு கல்யாணம் செய்து வைப்பதாக முடிவெடுத்திருக்கிறார்.
அன்புவின் அம்மாவை முந்திக்கொண்டு வார்டன் ஆனந்தியின் அப்பாவிடம் பெண் கேட்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
அப்படி கேட்டால், மகேஷ் குடும்பம் நல்ல இடம் என்று ஆனந்தி அப்பா சம்மதிக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது மகளுக்கு நல்ல அப்பாவா காதலுக்கு ஒப்புக்கொள்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.
இந்த கதை ஒருபுறம் இருக்க மறுபக்கம், ஆனந்திக்கு அவளுடைய அண்ணன் வேலுவை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.
ஆனந்தியின் அம்மா அப்பாவுக்கு ஆனந்தி அண்ணன் வேலு மீது கோபம் இருக்கிறது. ஆனந்தி மற்றும் வேலு பேசி சமாதானமாவது போல் காட்டப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கோகிலா கல்யாணத்திற்கு முன்பு உன்னை அப்பா அம்மா உடன் சேர்க்கிறேன் என ஆனந்தி வாக்குக் கொடுக்கிறாள்.