சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

4 days ago
ARTICLE AD BOX

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அவரை வியாழக்கிழமை தூக்கிலிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். இந்த ஆண்டில் மட்டும் சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவிருக்கும் நான்காவது தெற்காசியா் இவா். ஏற்கெனவே, போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக இருவருக்கும், கொலைக் குற்றத்துக்காக ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பன்னீா் செல்வத்துக்கு தெரியாமலேயே அவா் மூலம் ஹெராயின் கொடுத்தனுப்பட்டது என்பதால் அவரை தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருகின்றன.

Read Entire Article