ARTICLE AD BOX

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ‘சிக்கந்தர்’ படம் வெளியாகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்..
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா நடித்த ‘சிக்கந்தர்’ படம் வருகிற மார்ச் 28-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் ரிலீஸாக உள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் ‘ஜோரா ஜபின்’, ‘பம் பம் போலே’ பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான நிலையில் தற்போது ‘சிக்கந்தர் நாச்சே’ என்கிற டைட்டில் ட்ராக் பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர்.
இதில், இருவரும் வேற லெவலில் ஆடியிருக்கிறார்கள். சல்மான் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ‘சிக்கந்தர்’ படத்தின் டைட்டில் டிராக் பாடலின் டீசரை வெளியிட்டுள்ளார்.
23 செகண்ட்ஸ் நிகழும் இந்த வீடியோவில் சல்மான் செம மாஸாக இருக்கிறார். ராஷ்மிகா துள்ளலாக டான்ஸ் ஆடியிருக்கிறார். இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
சல்மானோட லுக் ‘டைகர்’ படத்தில் இருந்த மாதிரி இருக்கிறதென ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்த பாடலின் டீசரை பார்த்த பலரும் சல்மான், கத்ரீனா நடிச்ச ‘ஏக் தா டைகர்’ படத்தில் வந்த ‘மாஷா அல்லாஹ்’ பாட்டு மாதிரி இருக்கிறதென கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சிலரோ இது ‘பீஸ்ட்’ படத்தில் வரும் ‘அரபிக் குத்து’ பாடலை நினைவூட்டுவதாக கூறி வருகின்றனர்.

The post ‘சிக்கந்தர்’ பட ஸாங், மாஷா அல்லாஹ் மாதிரி; அரபிக் குத்து மாதிரி: வைரல் கமெண்ட்ஸ்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.