சிஎஸ்கேவில் இருந்து விலகிய 4 வீரர்கள்! அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

23 hours ago
ARTICLE AD BOX

இந்த வாரம் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணிக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. மொத்தம் உள்ள 18 சீசன்களில் 10 முறை ஐபிஎல் பைனலுக்கு சென்று, அதில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். கடைசியாக 2023 ஆம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தனர்.

இதனால் இந்த முறை தங்களது ஆறாவது கோப்பையை சென்னை அணி அடிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணியின் சில முக்கிய வீரர்கள் வேறு அணிகளுக்கு சென்றுள்ளனர். இதனால் அணிக்கு சாதகமா பாதகமா என்பதை ஐபிஎல் தொடர் தொடங்கி உடன் தான் தெரியும். சென்னை அணியில் இருந்து விலகி மற்ற அணியில் விளையாடப் போகும் வீரர்களை பற்றி பார்ப்போம்.

மேலும் படிங்க: RCB vs KKR: இரு அணிகளின் இம்பாக்ட் பிளேயர் யார்? பிளேயிங் XI இதோ!

முஸ்தாபிசுர் ரஹ்மான்

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை அணியில் இணைந்தார் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தாபிசுர் ரஹ்மான். பவர் பிளேயிலும், டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். மேலும் முக்கியமான நேரங்களில் விக்கெட்களை எடுத்து கொடுத்து அணிக்கு உதவினார். கடந்த சீசனில் சென்னை அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 22.71 சராசரி மற்றும் 14.70 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆண்டு ஏலத்தில் யாரும் அவரை அணியில் எடுக்கவில்லை.

துஷார் தேஷ்பாண்டே

கடந்த சில சீசன்களாக சென்னை அணிக்காக விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், அதன் பிறகு சிறப்பான ஒரு பவுலராக தன்னை மாற்றிக் கொண்டார். சிஎஸ்கேவின் மிகவும் நம்பகமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக துஷார் தேஷ்பாண்டே உருவெடுத்தார். பவர்பிளேயின் போதும், இறுதிக்கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2024ம் ஆண்டும் பல போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். ஆனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

டேரில் மிட்செல்

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் ஐபிஎல் 2024ல் சென்னை அணிக்காக விளையாடினார். ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாட கூடிய திறன் கொண்ட இவர் சென்னை அணிக்காக சில போட்டிகளில் நன்றாக விளையாடினார். டாப் ஆர்டர் சரிவை சந்தித்த போது நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். மேலும் இவர் பந்துவீச்சும் அணிக்கு உதவியது. இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை.

மிட்செல் சான்ட்னர்

சென்னை அணியில் இருந்து விலகிய மற்றொரு முக்கிய வீரர் மிட்செல் சான்ட்னர். நியூஸிலாந்து அணியை சேர்ந்த இவர் நீண்ட ஆண்டுகளாக அணியில் இருந்தாலும், குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அணியின் காம்பினேஷனால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். தற்போது நியூஸிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும் இவர் உலகின் சிறந்த பந்து வீச்சாளராக மாறி வருகிறார். ஐபிஎல் 2025 ஏலத்தில் மும்பை அணி இவரை எடுத்துள்ளது. சென்னைக்கு எதிராக சென்னை மண்ணில் இவரது பந்துவீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ஐபிஎல் 2025க்கான சென்னை சூப்பர் கிங்ஸ்அணி

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பத்திரனா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், டெவோன் கான்வே, சையத் கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் குர்ரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்ப்ரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோடி, ராமகிருஷ்ணன் கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தாரத்.

மேலும் படிங்க: பரிதாப நிலையில் லக்னோ அணி.. வேறு வழியின்றி ஷர்துல் தாக்கூரிடம் சென்ற சஞ்சீவ் கோயங்கா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article