சாலையில் சென்று கொண்டிருந்த கார்... நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த காட்சிகள் வைரல்..!

10 hours ago
ARTICLE AD BOX

கோவையில் சாலையில் சென்று கொண்டு இருந்த கார் திடீரென்று தீப்பற்றி எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

Advertisment

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தின், பெங்களூர் கிளை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் வினோத் என்பவர் தனது நண்பர் வடிவேல் என்பவரின் மகேந்திரா மொரோசோ காரை அலுவலக சம்பந்தமாக எடுத்து வந்து உள்ளார்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி.அலுவலகப் பணியை முடித்து விட்டு, அலுவலக நண்பருடன்  தனியார் தங்கும் விடுதியில் தங்குவதற்காக இரவு காரை எடுத்துக் கொண்டு வினோத் மற்றும் அவரது நண்பருடன் அவிநாசி சாலை ஹோப்ஸ் கல்லூரி அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென கார் பழுதாகி நின்று உள்ளது.

காரில் இருந்து இறங்கிய வினோத் அதனைப் பார்க்கும் போது புகை வந்து தீ பற்றி எரிந்து உள்ளது. உடனடியாக இருவரும் காரை விட்டு இறங்கினர். அக்கம், பக்கத்தினர் மற்றும் சாலையில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் உடனடியாக பீளமேடு காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீ விபத்து...#Coimbatore #fireaccident pic.twitter.com/TN0Qwarbcj

— Indian Express Tamil (@IeTamil) March 9, 2025

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் 6 பேர் உடனடியாக தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

மேலும் இது குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கார் நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததால் இயந்திர கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article