சாலிகிராமத்தில் பரபரப்பு மெத்தையில் தீப்பிடித்து ஐடி ஊழியர் கருகி சாவு: போலீசார் விசாரணை

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்த ஐடி ஊழியர் ஒருவர், படுக்கை அறையில் எரிந்த நிலையில் இறந்துகிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (34), பொறியாளரான இவர், சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் 7வது தெருவில் 2 ஆண்டுகளாக வீடு ஒன்று வாடைக்கு எடுத்து ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேதாஜிக்கு மதுபழக்கம் மற்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணியில் இருந்து நேதாஜி வீட்டிற்கு வந்தார். நேற்று அதிகாலை 3 மணிக்கு அவரது வீட்டில் இருந்து கரும்புகையுடன் தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அருகில் வசிப்போர், நேதாஜி வீட்டிற்கு சென்று கதவை தட்டினர். ஆனால் நேதாஜி கதவு திறக்காததால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நேதாஜி படுக்கை அறையில் மெத்தை எரிந்த நிலையில் அவரது உடலில் லேசான தீக்காயங்களுடன் இறந்துகிடந்தார்.

சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து நேதாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவரது செல்போனை கைப்பற்றினர். போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். தனியாக வசித்து வந்த நேதாஜி மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அவரை யாரேனும் கொலை செய்தார்களா அல்லது மது மயக்கத்தில் சிகரெட் தீ மெத்தையில் பட்டு தீப்பிடித்து உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

The post சாலிகிராமத்தில் பரபரப்பு மெத்தையில் தீப்பிடித்து ஐடி ஊழியர் கருகி சாவு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article