ARTICLE AD BOX

முன்னணி யூடியூப் பிரபலரான மிஸ்டர் பீஸ்ட் (ஜிம்மி டொனால்ட்சன்) சமூக சேவையிலும் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் மேற்கொள்ளும் முக்கியமான முயற்சி, மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள கோகோ பண்ணைகளில் வேலை பார்க்கும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களை கல்வி நோக்கி அழைத்துச் செல்லும் இலவச காலை உணவுத் திட்டம் ஆகும். இவர் தனது சொந்த செலவில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், அந்தப்பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 10% வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தை தொடங்கிய முதல் வாரத்திலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். மிஸ்டர் பீஸ்ட், இந்தத் திட்டத்தை அடுத்த ஒரு ஆண்டில் விரிவுபடுத்தி, அதன் மூலம் 15 லட்சம் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் இலக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய யூடியூப் வாயிலாகப் பெற்ற வருவாயை சமூக நலத்திற்காக பயன்படுத்தும் அவரது இந்த செயல், பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.