சாய்ரா பானு மருத்துவமனையில் அனுமதி.. வழக்கறிஞர் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி..

2 days ago
ARTICLE AD BOX

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், சாய்ரா பானுவின் வழக்கறிஞர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாய்ரா பானு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தேறியது. இந்த சவாலான நேரத்தில், சாய்ரா பானு விரைவாக குணமடைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

இந்த நேரத்தில் அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு, மேலும் அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்தார் என கூறப்பட்டுள்ளது. நன்றி தெரிவித்தவர்களின் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான் பெயரும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ரசூல் பூக்குட்டி மற்றும் அவருடைய மனைவிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article