ARTICLE AD BOX
Champions Trophy, India vs New Zealand final : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. துபாய் மைதானத்தில் நடக்கும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் பிளேயர்கள் பொறுத்தவரை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏனென்றால் லீக் போட்டியில் ஏற்கனவே ஒருமுறை இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது. அந்த காரணத்தை சுட்டிக்காட்டியும், துபாய் மைதானத்தில் மட்டுமே இந்திய அணி அனைத்து போட்டிகளையும் விளையாடுவதால் அங்கு நிலவும் சூழல் சாதகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரத்தில் நியூசிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் என இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளின் பிளேயர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அணியே வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்களை அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக இருப்பதையும், நாக்அவுட் போட்டிகளில் ஐசிசி தொடர்களில் இந்திய அணியை அந்த அணி தோற்கடித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், நியூசிலாந்து அணி பல மைதானங்களில் விளையாடி இருப்பதையும், இந்தியா ஒரே ஒரு மைதானத்தில் மட்டும் விளையாடிக் கொண்டிருப்பதும் பார்க்கும்போது நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு சாதகமாகவே அனைத்து போட்டிகளும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக பல முன்னாள் பிளேயர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனால் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் வரும் நாட்களிலும் ஐசிசி தொடர்கள் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்பதால் சாம்பியன்ஸ் டிராபி இறுத்திப்போட்டியில் இந்திய அணி வெல்லக்கூடாது என பல முன்னாள் கிரிக்கெட் பிளேயர்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
இருப்பினும் இந்திய அணி இப்போட்டியில் வெல்லவே அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்பட இருக்கும் பிட்சில் இந்திய அணி ஏற்கனவே விளையாடி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடிய பிட்சில் தான் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது. அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அதே மைதானம் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் நிச்சயம் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்த அதிக வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் நியூசிலாந்து அணியை குறைவாக எடை போட்டுவிட முடியாது. அந்த அணி இந்திய அணியை தோற்கடிக்க அதிக வாய்ப்பும் இருக்கிறது. இதனால் பரபரப்பான இப்போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | ind vs nz Final: இந்த அணிதான் கோப்பையை வெல்லும்.. அடித்து சொல்லும் ரவி சாஸ்திரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ