ARTICLE AD BOX
இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பதவி குறித்து அவர் மனம்திறந்து பேசியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணியின் துணை கேப்டனும், இளம் வீரருமான சுப்மன் கில் சூப்பர் சதம் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் பேட்டிங்கில் கடுமையாக சொதப்பிய நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் இவரை துணை கேப்டனாக்கியது ஏன்? என கேள்விகள் எழுந்தன. ஆனால் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார் சுப்மன் கில். இந்நிலையில், சாம்பின்ஸ் டிராபியில் துணை கேப்டனாக பணியாற்றியது குறித்து சுப்மன் கில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுப்மன் கில், ''நான் களத்தில் இருக்கும்போதெல்லாம், நாங்கள் வெளியே இருக்கும் போதெல்லாம், பந்து வீச்சாளர்களிடம் பேச முயற்சிக்கிறேன். இந்த வெயிலில் அவர்கள் சரியாக சிந்திப்பது எளிதல்ல. நான் மிட்-ஆன் மற்றும் மிட்-ஆஃப்பில் நிற்கும் போதெல்லாம் பந்து வீச்சாளர்களிடம் பேசும் பொறுப்பை ரோஹித் சர்மா எனக்குக் கொடுத்துள்ளார். பந்துவீச்சுத் திட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறேன். மேலும் பந்து வீச்சாளர்களிடம் தொடர்ந்து பேச முயற்சிக்கிறேன்'' என்றார்.
மேலும் துணை கேப்டன் பதவி பேட்டிங் திறனை பாதிக்குமா? என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சுப்மன் கில், ''துணை கேப்டன் வேறு. எனது பேட்டிங் வேறு. பேட்டிங் செய்யும் போது, நான் துணை கேப்டன் பொறுப்பை பற்றி யோசிப்பதில்லை. நான் பேட்டிங் செய்யும்போதெல்லாம், ஒரு பேட்ஸ்மேனாக சிந்தித்து என் அணிக்கு சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். துணை கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எப்படி பேட்டிங் செய்ய விரும்புகிறோனோ, அதைத்தான் செய்வேன்'' என்று தெரிவித்தார்.
லாகூரில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னணியில் ஐசிசி? பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

மேலும் ரோகித் சர்மாவுடன் ஒப்பனிங்கில் களமிறங்குவது குறித்து பேசிய சுப்மன் கில், ''ரோகித் சர்மா வானில பந்துகளை பறக்க விடுபவர். நான் தரையோடு தரையாக அடிக்க விரும்புபவன். தொடக்கத்தில் ரோகித் சர்மா ஆட்டத்தை எடுத்துக் கொள்வார். அவருக்கு ரிதம் கிடைக்காதபட்சத்தில் நான் ஆட்டத்தை எடுத்துக் கொள்வேன். இதுதான் எங்கள் பார்ட்னர்ஷிப்பின் சிறப்பு'' என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கு முன்பு சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதன்பிறகு அவரது செயல்திறன் மேம்பட்டுள்ளது. கடந்த சில ஆட்டங்களில் அவர் இரண்டு சதங்களையும், 2 அரை சதங்களையும் அடித்துள்ளார். மேலும் களத்தில் வீரர்களுடன் உரையாடி அடுத்த திட்டங்கள் குறித்தும் பேசுகிறார்.
ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும் என்ற கவுதம் கம்பீரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளார். இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு ஓடிஐயில் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
இவருக்கு 43 வயசுனு யார் சொன்னது! பாய்ந்து கேட்ச் பிடித்த யுவராஜ் சிங்! ரசிகர்கள் பிரம்மிப்பு!