ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று தொடங்கியுள்ளது. மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில் இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று இந்தியா வங்கதேச அணிகள் மோத இருக்கின்றன. இந்திய நேரப்படி நண்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி துபாயில் தொடங்க உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சரிசம பலத்துடன் உள்ளது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா அதிரடியில் வெளுக்க காத்திருக்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக பார்முக்கு திரும்பிய விராட் கோலி, ஸ்ரேயேஸ் ஐயர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். நடு வரிசையில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன்களை சேர்க்க தீவிரமாக உள்ளனர். பவுலிங்கை பொறுத்தவரை ஜடேஜா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி நல்ல நிலையில் உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஷமி அசத்த காத்திருக்கிறார். அர்ஷ்தீப் சிங் அவருடன் கைகோர்க்க உள்ளார். இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை ரிஷப் பண்ட்ட்க்கு பதிலாக கே.எல்.ராகுலும், குல்தீப் யாதவ்க்கு பதிலாக வருண் சக்கரவர்த்தியும் களமிறங்க உள்ளனர்.
முதல் போட்டியிலேயே மண்ணை கவ்விய பாகிஸ்தான்: 60 ரன் வித்தியாசத்தில் தட்டி தூக்கிய நியூசிலாந்து

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் வருண் சகரவர்த்தி, முகமது. ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்.
இந்திய அணி இங்கிலாந்து தொடரை வென்று விட்டு வந்து இருப்பது கூடுதல் பலமாக உள்ளது. அதே வேளையில் நஸ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையில் களமிறங்கும் வங்கதேச அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
அந்த அணியில் சவுமியா சர்கார், முஸ்திபூர் ரஹூம், முகமதுல்லா என சிறந்த வீரர்கள் பேட்டிங்கில் இருக்கின்றனர். ஆல்ரவுண்டர் மெகதி ஹசன் மிராஸ் எப்போதும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவர். பவுலிங்கில் தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் முதுகெலும்பாக திகழ்கின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான வங்கதேச அணியின் பிளேயிங் லெவன்: நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் நஹித் ராணா.
இந்தியா வங்கதேச அணிகள் இதுவரை 41 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 32 போட்டிகளிலும், வங்கதேசம் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. ஐசிசி தொடர்களை பொறுத்தவரை 6 போட்டிகளில் இந்தியா 5ல் வெற்றி வாகை சூடியுள்ளது. வங்கதேசம் ஒன்றில் வென்றுள்ளது.
சாட்டையை சுழற்றிய ஐசிசி! அடிபணிந்த பாகிஸ்தான்? பாகிஸ்தான் மைதானத்தில் பறந்த இந்திய தேசிய கொடி