ARTICLE AD BOX
சாமியாடி சொன்ன வாக்கு.. ரேவதி கல்யாணம் நடக்காது.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: மகேஷை சந்திக்கும் ரேவதி கல்யாணத்துக்கு பிறகு நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க போறேன். அந்த குழந்தைக்கு அஞ்சு வயசு. இந்த முடிவை நான் மட்டும் தனிப்பட்ட முறையில் எடுக்க முடியாது. கல்யாணத்துக்கு பிறகு என் கூட வாழ போற உங்களுக்கும் இதில் உடன்பாடு இருக்கணும். அதனாலதான் இத பத்தி உங்ககிட்ட பேசுறேன் என்று சொல்ல மாயா கண் காட்ட மகேஷ் சம்மதம் சொல்கிறான். இதுகுறித்து மகேஷ் குடிபோதையில் பேசியதை மயில்வாகனம் வீடியோவாக பதிவு செய்து, அதை சாமுண்டீஸ்வரி இடம் கொடுத்து நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இன்றைய எபிசோடில், மயில்வாகனம், மாப்பிள்ளை மகேஷ் பற்றி பல விஷயத்தை நான் சொல்ல போகிறேன் அதைப்பற்றி கேட்டால் நீங்கள் இந்த கல்யாணத்யே நிறுத்திவிடுவீர்கள் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி முதலில் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் என்கிறாள். இதையடுத்து, மகேஷ் குடிபோதையில் உளறிய வீடியோவை காட்ட, அந்த வீடியோவில்.ஆடியோ இல்லாமல் இருக்க மயில்வாகனம் என்ன செய்து என்று தெரியாமல் முழிக்கிறார். உடனே, சாமுண்டீஸ்வரி எதுக்கு இப்படி எல்லாம் செய்றீங்க என மயில்வாகனத்தை திட்டுகிறாள்.
மகேஷ் எடுக்கும் முடிவு: அதனைத் தொடர்ந்து மயில்வாகனம் தன்னை சிக்க வைத்த மகேசை ஏதாவது செய்ய வேண்டுமென யோசிக்கிறான். இந்த சமயத்தில் துர்கா காரில் இருந்து ஒரு பொருளை எடுக்கச் செல்ல ரவுடி ஒருவன் அவளிடம் பிரச்சனை செய்கிறான். மயில்வாகனம் தடுக்க போக ரவுடி அவனை அடிக்க போக மகேஷை சிக்க வைக்க திட்டமிடுகிறான். அதாவது என் குடும்பத்துல என்னை விட பெரிய ஆள் ஒருத்தர் இருக்காரு. அவர் மேல கையவை என்று சொல்லி மகேஷை போட்டு விடுகிறான்.
அடுத்த நாள் காலையில் சாமியாடியிடம் குறி கேட்க எல்லோரும் தயாராக இருக்கின்றனர். மகேஷை பார்த்த சாமியாடி உனக்கெல்லாம் குறி சொல்ல முடியாது என துரத்தி விடுகிறார். அடுத்ததாக சாமுண்டீஸ்வரியை பார்த்த அவர் உன் பொண்ணு கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.. ஆனால் நீ நினைக்குறவனுடன் நடக்காது என குறி சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.