திருப்பதிக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. என்ன விசேஷமோ?.. குட் நியூஸ் சொல்வாங்களோ

3 hours ago
ARTICLE AD BOX

திருப்பதிக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. என்ன விசேஷமோ?.. குட் நியூஸ் சொல்வாங்களோ

News
oi-Karunanithi Vikraman
| Published: Monday, February 3, 2025, 16:10 [IST]
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள். கடந்த வருடம் குடும்ப நல நீதிமன்றத்தில் இரண்டு பேருமே தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்கள். சில கவுன்சிலிங்குக்கு பிறகும் அவர்கள் விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்தார்கள். எனவே அவர்களுக்கு நீதிமன்றம் டைவர்ஸ் வழங்கியது.
காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை பாராட்டும்போது ஏற்பட்ட பழக்கம் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதலாக மாறியது. பிறகு சில சிக்கல்களை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இருவரின் காதலுக்கு அடையாளமாக யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே உச்சக்கட்ட காதலோடு தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருந்தார்கள். முக்கியமாக இரண்டு பேரும் ஒருவரையொருவர் அனுசரித்தும், துணையாகவும் இருந்தனர்.
aishwarya rajinikanth dhanush
இயக்குநர் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யாவுக்கு இயக்குநராகும் ஆசை இருப்பதை தெரிந்துகொண்ட தனுஷ் 3 படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவர் இயக்கிய வை ராஜா வை படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. அப்படத்திலும் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படி இருக்க திடீரென இருவரும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
கரியரில் கவனம்: தனுஷை பிரிந்த பிறகு சில வருடங்கள் எந்தப் படமும் இயக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் லால் சலாம் படம் தியேட்டரில் வெளியானது. ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதை கூறினார் ஐஸ். அது பெரும் ட்ரோலுக்கு உள்ளானது. மேலும் இன்றுவரை லால் சலாம் ஓடிடியிலும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து: இதற்கிடையே தனுஷும், ஐஸ்வர்யாவும் சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் இரண்டு பேரும் பிரிவதாக அறிவித்தார்கள். அதனையடுத்து சில காலம் கழித்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்தை கொடுத்துவிட்டது. எனவே தனுஷும், ஐஸ்வர்யாவும் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டார்கள். இது ரசிகர்களிடையே பெரும் ஷாக்கை ஏற்படுத்தியது.
ஐஸ்வர்யா தரிசனம்: ரஜினியின் மகளை பொறுத்தவரை அவரது தந்தை போலவே ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். கோயில்களுக்கு தொடர்ந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் ட்ரெண்டாகின. இதனைப் பார்த்த ரசிகர்கள் கோயிலுக்கு போயிருக்கும் ஐஸ்வர்யா ஒருவேளை தனது சினிமா வாழ்க்கை பற்றியோ அல்லது பெர்சனல் வாழ்க்கை பற்றியோ குட் நியூஸ் சொல்வாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Dhanush and Aishwarya announced their separation on their social media pages a few years ago. After some time, they filed for divorce in the family court. The court granted them a divorce last year. So, Dhanush and Aishwarya are now legally separated. This came as a huge shock to the fans.
Read Entire Article