ARTICLE AD BOX
மும்பை : கிரிக்கெட்டில் எப்போதுமே ஒரு பேட்ஸ்மேன் சிறந்து விளையாடுகிறார் என்பதை பலரும் ரன்களை வைத்து தான் முடிவு செய்வார்கள். ஆனால் அந்த ரன்கள் எப்படி வருகிறது என்பதை பார்த்து தான் கிரிக்கெட் வல்லுநர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் ஒரு வீரரை குறித்து மதிப்பிடுவார்கள்.
அந்த வகையில் கிரிக்கெட்டில் கவர் டிரைவ் என பல சாட்டுகள் இருக்கிறது. இந்த ஷாட்களை யார் சிறப்பாக ஆடுகிறார்கள் என்று அப்போதெல்லாம் போட்டி நடக்கும். தற்போது கிரிக்கெட் மாறி வருவதால் இது போன்ற ஷாட்களை பெரியளவு தற்போது இருக்கும் வீரர்கள் விளையாடுவதில்லை.

பேட்டை சுற்றி சிக்ஸர் அடிக்க தான் பார்க்கிறார்கள். ஆனால் இருப்பதிலேயே மிகவும் சிறந்த ஷாட் என்றால் அது ஸ்ட்ரைட் டிரைவ் தான். குறிப்பாக மைதானத்தில் பேட்ஸ்மன்னுக்கு நேராக பௌண்டரி லைனில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது இந்த ஷாட்டை ஆடினால் நிச்சயம் உங்களுக்கு ரன்கள் கிடைக்கும். இதனால்தான் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்லும்போது முதலில் ஸ்ட்ரைட் டிரைவ் ஆடுவது எப்படி என்று பயிற்சியாளர்கள் சொல்லித் தருவார்கள்.
அந்த வகையில் சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் இந்த ஸ்ட்ரைட் ட்ரைவை அபாரமாக ஆடுவார்கள். இந்த சூழலில் தற்போது இருக்கும் சர்வதேச கிரிக்கெட் அணியில் யார் ஸ்டிரைட் டிரைவ் நன்றாக ஆடுவார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் விராட் கோலி. கிரிக்கெட் யுக்திகளை கை தேர்ந்தவர் பந்தை சரியாக அடித்து ரன்கள் சேர்ப்பார்.
ஆனால் கோலியின் பேட்டிங் டெக்னிக் கொஞ்சம் வித்தியாசமானது என்பதால் மற்றவர்களை விட கோலி அடிக்கும் கொஞ்சம் வித்தியாசமாக தோன்றும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன். வில்லியம்சனுக்கு மிகவும் பிடித்த ஷாட்களில் ஸ்ட்ரைட் ரைவும் ஒன்று.
எப்போதெல்லாம் ரன்கள் வேண்டுமோ அப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்ட்ரைட் டிரைவ் ஆடி வில்லியம்சன் ரன்களை எடுத்துக் கொள்வார்.இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜோ ரூட். ஸ்ட்ரைட் டிரைவ் என்றால் இப்படித்தான் ஆட வேண்டும் என புத்தகத்தில் எப்படி எழுதி இருக்குமோ, அதை அப்படியே களத்தில் செய்பவர்தான் ரூட்.
இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தும் ஸ்ட்ரைட் டிரைவை ஆடுவார். இதை தாம் சச்சின் இடம் தான் கற்றுக் கொண்டேன் என்றும் அவர் பலமுறை கூறியிருக்கிறார். இந்திய அணியில் சிறப்பாக ஸ்ட்ரைட் டிரைவ் தற்போது ஆடும் வீரர் யார் என்றால் அது ரஹானே தான். இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரகானேவால் ஜொலிக்க முடிந்தது. குறிப்பாக ஸ்டரைட் டிரைவ் நன்றாக ஆடும் வீரர்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்கும் வீரர்களாக திகழ்வார்கள்.