சரும புற்றுநோயை வராமல் தடுக்கும் உணவுகள்..!

2 hours ago
ARTICLE AD BOX

புற்றுநோய்களில் ஒன்றான சரும புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருப்பது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள். ஏனெனில் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தின் மீது நீண்ட நேரம் படுவதால் சரும புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகிறது.

பொதுவாக நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சில உணவுகள் புற்றுநோயை குறிப்பாக சரும புற்றுநோயை வராமல் தடுக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவற்றை என்னென்ன என இப்பதிவில் பார்ப்போம்.

பெர்ரி: ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் காணப்படுகின்றன. அதிலும் புற்றுநோயை அழிக்கக் கூடிய நிறமியான எபினைன் இதில் இருக்கிறது. இதில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இதனை வழங்குகிறது.

பெர்ரி பழங்கள் மட்டுமன்றி மற்ற பழங்களும், காய்கறிகளும் சூரியக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

காபி: காபிக்கு புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்பட்ட செல்களை புற்றுநோயை உண்டாக்காமல் அழிக்கும் சக்தி இருக்கிறது. மேலும் காபி குடிப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட செல்களை அழித்து, புற்றுநோய் உண்டாவதை தடுக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தக்காளி: தக்காளியை நன்கு சமைத்து உண்டால் அதிலிருக்கும் லைகோபைன், சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்களை சருமத்தில் பட்டாலும் பிரச்னைகளை ஏற்படுத்தாதவாறு பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள்:
சங்கு கழுத்து சொல்லும் சாஸ்திரம் என்ன தெரியுமா?
Foods that prevent skin cancer..!

மேலும் தக்காளியானது சருமத்தை பராமரிக்க சிறந்த அழகு பொருளாகவும் பயன்படுகிறது. எனவே தினந்தோறும் தக்காளியை அரைத்து சருமத்திற்கு தடவி ஒரு பேஸ்பேக் போன்று பயன்படுத்தலாம்.

கத்தரிக்காய்: ‌கத்தரிக்காயில் உள்ள பைட்டோ கெமிக்கலான சோலாசோடைன் கிளைகோசைடு பரவும் மற்ற புற்றுநோயை குணப்படுத்தும். தினமும் கத்தரிக்காயை சேர்த்து வர புற்றுநோயை வராமல் தடுக்கும்.

இது தவிர ப்ராக்கோலி புற்றுநோயை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. சூப்பாகவோ, பொரியலாகவோ சாப்பிட்டு வர சரும புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்து புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.

இதை தவிர சன்ஸ்கிரீன் தினமும் உபயோகிக்கலாம். ஓசோன் படலத்தில் துளை விழுந்ததால், சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக சருமத்தில்பட்டு, பெரும்பாலும் சரும புற்றுநோயானது ஏற்படுகிறது. எனவே, இந்த கதிர்கள் சருமத்தில் படாமலிருக்க, வெளியே செல்லும்போது ஏதேனும் ஒரு சன் ஸ்கீரினை கைகள் மற்றும் வெயில்படும் இடங்களில் தடவிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து வெளியில் செல்லலாம்.

உணவே மருந்து, உணவே நலம் தரும் என்பதை மனதில் கொண்டு ஆரோக்கியமான உணவு முறைகளை கடைபிடிக்க புற்றுநோய் முதற்கொண்டு எந்த நோயும் அண்டாது.

Read Entire Article