வேலைக்கு போகும் அம்மாக்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 சூப்பர் டிப்ஸ்!!

2 hours ago
ARTICLE AD BOX

Stress Relief For Working Mothers : வேலைக்கு போகும் தாய்மார்கள் அலுவலகம் மற்றும் வீட்டின் மன அழுத்தத்தை சமாளிக்க ஐந்து வழிகள் இங்கே.

வேலைக்கு போகும் அம்மாக்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 சூப்பர் டிப்ஸ்!!

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் வேலைக்கு செய்யும் பெண்கள் எப்போதுமே வேலை அழுத்தமானது இரண்டு வருடங்கள் இருக்கும். ஏனென்றால் அவர்கள் வீட்டில் இருக்கும் பொறுப்புகளை மட்டுமல்ல, அலுவலகத்திலும் தங்களது வேலையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், ஒரு சிறிய தவறு வந்தால் கூட அது அவர்களது வேலைக்கு தான் பாதிப்பு. எனவே இது போன்ற சூழலையில் பெண்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்வது ரொம்பவே முக்கியம். இல்லையெனில், மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் இதனால் அவர்களது உடல் நலம் தான் பாதிக்கப்படும். எனவே வேலைக்கு போகும் ஒவ்வொரு தாய்மார்களும் வீடும் மற்றும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மற்றும் பின்பற்றினால் போதும்.

ஆம், நீங்கள் கேட்டது சரிதான். நீங்கள் உங்களது உடலே நீரேற்றமாக வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். ஏனெனில் வேலை செய்யும் போது நீங்கள் குறைவாக தண்ணீர் குடித்தால் அதனுடைய பிரதிபலிப்பானது தலைவலி பதட்டம் ஆற்றலின்மை போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க வேலை செய்யும் தாய்மார்கள் அவ்வப்போது தண்ணீர் குடித்து தங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

vவேலை முடிந்து வந்ததும் சிறிது நேரம் உங்கள் குழந்தையுடன் நேரம் செலவிடுங்கள். ஏன் நீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாடு கூட செய்யலாம். இதனால் உங்களது மன அழுத்தம் குறையும். முக்கியமாக உங்களுக்கும் உங்களது குழந்தைக்கு இடையே ஒரு நல்ல பிணைப்பு உருவாகும். இதற்கு நீங்கள் உங்கள் குழந்தையை வெளியில் எங்காவது அழைத்து செல்லலாம் அல்லது வீட்டில் ஓவியம் வரைதல், புதிர்கள் போன்ற பல்வேறு விஷயங்களை செய்து அவர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம்.

இதையும் படிங்க:  உங்கள் மன அழுத்தத்தை குறைக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்..!!

 

நீங்கள் எவ்வளவு வேலையில் பிஸியாக இருந்தாலும் உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி வையுங்கள். இதற்கு நீங்கள் பால்கனியில் தனியாக அமர்ந்து ஒரு கப் டீ குடித்தாலும் சரி, சரும பராமரிப்பு விஷயங்களை பின்பற்றினாலும் சரி அல்லது பார்லருக்கு சென்றாலும் சரி என எதுவாக இருந்தாலும் உங்களுக்கு என சிறிது நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: வேலை பளு அதிகமா இருக்கா? மன அழுத்தத்தை குறைக்க உதவும் டிப்ஸ் இதோ!

இது சொல்வது ரொம்பவே சுலபம். ஆனால் செய்வது தான் கடினம். ஏனெனில் வேலை செய்யும் ஒவ்வொரு அம்மாக்களும் தங்கள் வீட்டு வேலை மற்றும் குழந்தைகளை கிளப்புவது, பிறகு அலுவலகத்திற்கு தயாராவது என அதற்கே சரியாக நேரம் இருக்கும். ஆனால் இதற்கென நீங்கள் குறைந்த நேரத்தையாவது கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, வீட்டில் இருந்தபடியே ஏதாவது எளிதான உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் மனமும் அமைதியாக இருக்கும்.

மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி மற்றவர்களுடன் பேசுவது தான். ஆம், வீடு மற்றும் அலுவலகம் தொடர்பான மன அழுத்தம் குறைக்க நீங்கள் மற்றவர்களுடன் உங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது பிறரிடம் பேசும் நாள் உங்களது மனம் இலகுவாகிவிடும் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். பிறகு அந்த பிரச்சனையை விட அதற்கான தீர்வில் தான் அதிக கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள். பிறகு உங்களது மன அழுத்தமானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

Read Entire Article