சரவண பவன் ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்யத் தெரியுமா? இதோ அசத்தலான ரெசிபி! செஞ்சு பாருங்க!

2 days ago
ARTICLE AD BOX

தேவையான பொருட்கள்

அரை கப்  துவரம் பருப்பு

1 கத்திரிக்காய் 

1 முருங்கைக்காய் 

10 முதல் 14 சாம்பார் வெங்காயம் 

1 தக்காளி 

2 பச்சை மிளகாய்

சிறிய அளவிலான புளி 

தேவையான அளவு உப்பு 

2 டீஸ்பூன் பொட்டுக்கடலை 

1 பெரிய தக்காளி - 

துருவிய தேங்காய்

4 டீஸ்பூன் சாம்பார் பொடி 

சிறிதளவு பெருங்காயம் 

தாளிக்க:

அரை டீஸ்பூன் கடுகு 

அரை டீஸ்பூன் சீரகம் 

அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு 

2 வற்றல் மிளகாய் 

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை

ஒரு கைப்பிடி கொத்த மல்லி இலை

செய்முறை

முதலில் கத்தரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும். சாம்பார் செய்ய முதலில் துவரம் பருப்பை குக்கர் அல்லது சட்டியில் வேக வைக்கவும். வேகவைத்த பருப்புடன் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், கீறிய பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும். 

பின்னர் ஒரு மிக்ஸியில் பொட்டுக்கடலை, தக்காளி, சாம்பார் பொடி, துருவிய தேங்காய் மற்றும் பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் கொதிக்கும் பருப்பில் இதனை சேர்க்க வேண்டும். இப்பொழுது அதனுடன் புளியையும் கரைத்து ஒன்றாக, கொதிக்கும் சாம்பாரில் விடவும். காய் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும். தாளிப்பதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாநாட்டும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி சாம்பரை அதில் ஊற்றவும். கொத்தமல்லி இலை போட்டு கொதித்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான சரவண பவன் சாம்பார் ரெடி!

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, 2019 ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆங்கில இலக்கியத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேல் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். இவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், லைப்ஸ்டைல், சினிமா மற்றும் உலகம் தொடர்பான செய்திகளில் தனது பங்களிப்பை அளித்து வருக்கிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article