சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாத 5 எண்ணெய்கள்!

6 days ago
ARTICLE AD BOX

ண்ணெய்கள் சமையலுக்கு சுவையைக் கூட்டுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணெய்களை உபயோகிக்கின்றனர். ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாத 5 எண்ணெய்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.  ஏனெனில், அவற்றில் டிரான்ஸ் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு, இதய நோய், சர்க்கரை நோய் போன்ற ஆபத்தான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

2. ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள்: ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் தயாரிக்க ஹைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுவதால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதாவது, குறைந்த வெப்பநிலையிலும் இந்த எண்ணெய் திடமாக இருப்பதோடு, பல தொகுக்கப்பட்ட உணவுப் பொருட்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் நம் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிப்பதோடு, இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

5 oils you should never use for cooking!
சிவப்பு நிற ரயில்களுக்கும் நீல நிற ரயில்களுக்கும் என்ன வித்தியாசம்?

3. பாமாயில்: பாமாயிலில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் இருப்பதால் இது உடம்பிற்கு நல்லதல்ல. பாமாயில் பயன்பாடு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இந்த எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க, காடுகளை வெட்டி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்தும் வருகின்றனர்.

4. தாவர எண்ணெய்: தாவர எண்ணெயில் சோயாபீன் எண்ணெய் ,சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற பல எண்ணெய்களின் கலவையாக இருப்பதால் இது சமையலுக்கு உகந்ததல்ல என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்த எண்ணெய்களில் ஒமேகா 6, கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் உள்ளன. ஆனால், நமது உடலுக்கு ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சரியான விகிதம் தேவைப்படுவதால் அவற்றின் ஏற்றத்தாழ்வு காரணமாக, உடல் அழற்சியுடன் பல உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

5 oils you should never use for cooking!
காட்டேரி அம்மன் உருவான கதை தெரியுமா?

5. கடலை எண்ணெய்: கடலை எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருப்பதால் இது நல்ல எண்ணெய் அல்ல என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும், வேர்க்கடலை எண்ணெய் இதய நோய் அபாயத்தை பெரிதும் அதிகரிப்பதோடு, எண்ணெயும் அலர்ஜியை ஏற்படுத்தும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

மேற்கூறிய ஐந்து வகை எண்ணெய்களும் சமையலுக்கு உகந்ததல்ல என்பது நிபுணர்களின் கருத்தாக இருப்பதால் இவற்றைத் தவிர்த்து பிற எண்ணெய்களை சமையலுக்குப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பேணுங்கள்.

Read Entire Article