ARTICLE AD BOX
இலக்குகளை நிர்ணயித்து அதை அடைகிற அவசரத்தில் வழுக்கி விழுபவர்களுக்கு தான் பொறாமையும், விரக்தியும்.
24 மணி நேரமும் இருவர் கட்டாயத்தின் பேரில் கைதிகளை போல் ஒன்றாக கழிக்கிற வாழ்க்கை எவ்வளவு போலியாக இருக்கும்.
மேம்போக்காக வாழ்பவர்கள் யாருமே பாதிக்கப்படுவதில்லை.
விலங்குகள் பாதுகாப்பான அடிமை தனத்தை விட மேலானது ஆபத்தான சுதந்திரம் என கருத்துகின்றன.
மரணத்திற்கு நியாயம், தர்மம் இல்லை.
எல்லோரும் சாவு வீட்டில் தனக்காக மட்டுமே அழுகிறார்கள்.
இயற்கையின் படைப்பில் தன்னை அசிங்கமாக்கி கொண்டவன் மனிதனே.
ஆன்மிகம் என்பது பதற்றம் இல்லாமல் வாழ்வது.
குப்பைகளை மூளை யில் திணிப்பவர் களுக்கு ஒழுங்காக குளிக்க கூட நேரம் இருக்காது.
வாழ்க்கை, நினைவுகளின் தொகுப்பு அவ்வளவே.