ARTICLE AD BOX
சமந்தா அந்த மூன்று நாட்கள் இப்படித்தான் இருந்தாரா?.. அதுதான் அவருக்கு பிடிச்சிருக்காம்
சென்னை: சமந்தா தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே ஆன்மீகத்திலும் கவனம் செலுத்திவரும் சாம்; தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் அறிமுகமாகி; மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோயினாக மாறியவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து தமிழில் வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் விரைவிலேயே முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். அப்படி அவர் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் மார்க்கெட்: தமிழில் அவரது வளர்ச்சி இருந்த சூழலில் அடுத்ததாக தெலுங்கு திரையுலகுக்கு அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கௌதம் அங்கு சமந்தாவை வைத்து ரீமேக் செய்தார். அந்தப் படம் அவருக்கு நாக சைதன்யாவுடன் காதலையும், தெலுங்கு திரையுலக வாய்ப்புகளை ஒருசேர பெற்றுக்கொடுத்தது. அங்கும் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருந்த அவர்; கடந்த 2017ஆம் ஆண்டு நாக சைதன்யாவை கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.
குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜின் 2ஆவது காதல்?..அந்தப் பெண்ணுடன் இப்படித்தான் பழக ஆரம்பித்தாரா?
பிரிந்த சமந்தா: இரண்டு பேரும் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமான இரண்டு என்றால்; சமந்தா திருமணத்துக்கு பிறகும் நடித்தது நாக சைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்பதும்; சாமுக்கு மையோசிடிஸ் வந்ததுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் என்ன காரணம் என்று இரண்டு பேருமே வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
மீண்டும் நடிப்பில் பிஸி: மையோசிடிஸ் நோய் காரணமாக சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர்; சிகிச்சையை முடித்த பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் கடைசியாக அவர் ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார். இதற்கிடையே அந்த இயக்குநர்களில் ஒருவரான ராஜுடன் சாம் டேட்டிங் செய்துவருவதாக கூறப்படுகிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் அவர் போடும் சில போஸ்ட்டுகளும் காதலில் அவர் மீண்டும் விழுந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோ சங்கர் மகள் இவ்வளவு சின்சியரா?.. குழந்தை பெற்றதும் என்ன செஞ்சிருக்கார் தெரியுமா?
சமந்தாவின் பதிவு: ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர் சமந்தா. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈஷா யோகா மையத்துக்கு சென்றது குறித்து, "ஈஷா யோகா மையத்தில் மூன்று நாட்கள் மௌன விரதம் இருந்தேன். தொலைபேசியை பயன்படுத்தவில்லை. யாரிடமும் பேசவில்லை. தனிமையாக அந்த மூன்று நாட்களும் இருந்தேன். அதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. கண்டிப்பாக இதனை நான் மீண்டும் முயற்சிப்பேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு ரசிகர்களிடையே ட்ரெண்டாகியிருக்கிறது.