சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய! பக்தர்களுக்கு புதிய நடைமுறை அமல்!

6 hours ago
ARTICLE AD BOX

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய! பக்தர்களுக்கு புதிய நடைமுறை அமல்!

Thiruvananthapuram
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தை விரைவுப்படுத்த தேவஸ்வம் போர்டு ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.

சபரிமலைக்கு சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்களும் மற்ற நடை திறப்பு நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

thiruvananthapuram sabarimala

அப்போது தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்தனர்.

இன்றைய தினம் முதல் 19-ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, சகஸ்ர பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை , புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

19ஆம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு ஹரிவாராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தரிசன நேரம் கூடுதலாக கிடைக்கவும் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஒரு முடிவு செய்துள்ளது.

அதாவது 18ஆம் படி மீது ஏறி செல்லும் பக்தர்கள் மேம்பாலம் வழியாக சுற்றி வந்து பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது, சுவாமி தரிசனம் செய்யவும் நீண்ட நேரமாகிறது, இங்கு காத்திருக்கும் நேரத்தால் சுற்றுலா வந்த பக்தர்களால் மற்ற ஊர்களை சுற்றி பார்க்க முடியாத நிலை இருக்கிறது என பக்தர்கள் கருதினர்.

இதை தேவஸ்வம் போர்ட்டிலும் அவர்கள் புகாராக பதிவு செய்தனர். இதையடுத்து சபரிமலையில் புதிய நடைமுறையை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. அது நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதாவது 18ஆம் படி ஏறிச் செல்லும் பக்தர்கள் மேம்பாலம் வழியாக செல்லாமல் கொடி மரத்தில் இருந்து கோயில் நடை பகுதிக்கு இரு வரிசைகளாக சென்று தரிசனம் செய்தனர். இந்த புதிய நடைமுறையை பக்தர்கள் வரவேற்றனர். சுவாமியை நன்கு நிதானமாக தரிசிக்க முடிவதாகவும் கூட்ட நெரிசலையும் நேரத்தையும் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு எடுத்துள்ள இந்த முயற்சியை பாராட்டுகிறார்கள்.

More From
Prev
Next
English summary
A new rule imposed in Sabarimala Iyyappan temple to fasten dharshan time by Travancore Devaswom Board.
Read Entire Article