ARTICLE AD BOX
சென்னை: இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சி.யு.பி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் (எஸ்.ஆர்.எச்) தனது பிரத்யேக வங்கி கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன்மூலம், மேம்பட்ட வங்கி மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதோடு ரசிகர்களை அற்புத கிரிக்கெட் உலகத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கூட்டாண்மையின் மூலம், சிட்டி யூனியன் வங்கி வலுவான வங்கி சேவை மற்றும் கிரிக்கெட்டின் உற்சாக உணர்வை இணைத்து எஸ்.ஆர்.எச் ரசிகர்கள், வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மற்றும் பிரத்யேக சலுகைகளை வழங்கும். இந்த கூட்டணி, சிட்டி யூனியன் வங்கியின் புதுமைகளைப் படைக்கும் ஆர்வம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு ஆர்வலர்களுடன் இணைவதற்கான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
கூட்டாண்மையின் சிறப்பம்சங்கள்:
* சிட்டி யூனியன் வங்கி, தனிப்பயனாக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள், கடன்கள் மற்றும் எஸ்.ஆர்.எச் ஆதரவாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கோ பிராண்டட் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரத்யேக வங்கித் தயாரிப்புகளை வழங்கும். அட்டைதாரர்கள், சிறப்பு வெகுமதிகள், எஸ்.ஆர்.எச் வணிகப் பொருட்களில் தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக ரசிகர் அனுபவங்களுக்கான வாய்ப்பைப் பெறலாம்.
* கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, சி.யு.பி வாடிக்கையாளர்கள் ஜெர்சிகள், தொப்பிகள் மற்றும் பிற நினைவுப் பொருட்கள் உள்ளிட்ட எஸ்.ஆர்.எச் வணிகப் பொருட்களை வாங்குவதில் பிரத்யேக சலுகைகளைப் பெறுவார்கள். இது ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணியை ஆதரிக்க வழிவகுக்கிறது.
* ரசிகர்களுக்கு பயன்படுத்துவதற்கு எளிதான மொபைல் வங்கிச்சேவை, தொடர்பு இல்லாத கட்டணம் செலுத்தும் வழிகள் மற்றும் எஸ்.ஆர்.எச் ஆன்லைன் தளங்கள் மூலம் பிரத்யேக எஸ்.ஆர்.எச் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உடனடி வாய்ப்பு ஆகியவை அடங்கிய தடையற்ற டிஜிட்டல் வங்கிச்சேவையை சிட்டி யூனியன் வங்கி வழங்கும்.
* இந்த கூட்டாண்மை, ரசிகர்களுடனான ஈடுபாட்டை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட டிஜிட்டல் மற்றும் வெளிப்புற நிகழ்வுகள் வாயிலாக எஸ்.ஆர்.எச் போட்டி நாட்களில் சி.யு.பி முன்னிறுத்தப்படுவதை உறுதி செய்யும். இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் என்.காமகோடி கூறுகையில், “சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் அவர்களின் பிரத்யேக வங்கி கூட்டாளராக இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த கூட்டாண்மை மூலம், ரசிகர்களை அவர்கள் விரும்பும் விளையாட்டுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் அதே நேரத்தில் அவர்களுக்கு மேம்பட்ட வங்கி அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,’’ என்றார். சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சண்முகம் கூறுகையில், “சிட்டி யூனியன் வங்கியை எங்கள் பிரத்யேக வங்கிக் கூட்டாளியாக வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
வங்கித்துறையில் அவர்களின் புதுமையான அணுகுமுறை, எங்கள் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் எங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது. இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களுக்கு எங்களை நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு பயனுள்ள கூட்டாண்மையை நாங்கள் எதிர்நோக்குகிறோம்,’’ என்றார்.
The post சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் சிட்டி யூனியன் வங்கி கூட்டாண்மை appeared first on Dinakaran.