ARTICLE AD BOX
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. ‘ஜெயிலர் 2’ படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம், ‘ஜெயிலர்’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது.
அந்த போஸ்டரில் “வேட்டை ஆரம்பம்” என்றும் குறிப்பிடப்பட்டதுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம், மிகப் பெரும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது பாகம் உருவாக உள்ளதால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு நிலவுகிறது. முதல் பாகத்தை போல் இந்த பாகத்துக்கும் ரசிகர்களிடம் இப்போது முதலே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.