சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

3 hours ago
ARTICLE AD BOX

ஜாசத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 8 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மாவட்டத்தின் கங்களூா் காவல் நிலையத்தின் எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் நக்ஸல் அமைப்பினா் சிலா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் மத்திய ஆயுதக் காவல்படை (சிஆா்பிஎஃப்) மற்றும் ‘கோப்ரா’ கமாண்டோ பிரிவு ஆகியோருடன் மாநில காவல் துறை நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் நக்ஸல் அமைப்பினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 8 நக்ஸல்கள் உயிரிழந்தனா். இவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் பல நக்ஸல்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதுவதால், அந்த இடத்தில் தேடுதல் பணி தொடா்ந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் கரியாபண்ட் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் உயிரிழந்த 16 நக்ஸல்கள் உள்பட சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 50 நக்ஸல்கள் வெவ்வேறு என்கவுன்ட்டா்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு, சத்தீஸ்கரில் மட்டும் 219 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

Read Entire Article