சச்சின், சேவாக், யுவி போன்ற ஜாம்பவான்களை முந்திய கிங் கோலி.. ஐசிசி நாயகனாக 6 வரலாற்று சாதனை

16 hours ago
ARTICLE AD BOX

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபில் இந்திய கிரிக்கெட் அணி முதல் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. துபாயில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 265 ரன்களை 48.1 ஓவரில் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 84 ஸ்ரேயாஸ் ஐயர் 45, ராகுல் 42* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

அதனால் ஆஸ்திரேலியாவை இந்தத் தொடரிலிருந்து வெளியேற்றிய இந்தியா 2023 உலகக் கோப்பை ஃ பைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையும் சேர்த்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அவர் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

நாயகன் கிங் கோலி:

இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சௌரவ் கங்குலி, ரவீந்திர ஜடேஜா, வீரேந்திர சேவாக் யுவராஜ் சிங் தலா 2 ஆட்டநாயகன் விருதுகள் வென்றதே முந்தைய சாதனை. இது போக ஐசிசி நாக் அவுட் அதாவது செமி ஃபைனல், ஃபைனல் போட்டிகளில் விராட் கோலி 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

இதன் வாயிலாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங் சாதனையை (இருவரும் தலா 3) விராட் கோலி சமன் செய்துள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மோகிந்தர் அமர்நாத், சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா (தலா 2) உள்ளனர். இத்துடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

உலக சாதனைகள்:

இதுவரை விராட் கோலி 746* ரன்கள் அடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஷிகர் தவான் 701 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக (7) முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, ஷிகர் தவான் தலா 6 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: ஹாட்ரிக் ஃபைனல்.. 4க்கு 4.. ஐசிசி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியா இரட்டை உலக சாதனை

இது மட்டுமில்லாமல் ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக (24) முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 23 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா 808 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

The post சச்சின், சேவாக், யுவி போன்ற ஜாம்பவான்களை முந்திய கிங் கோலி.. ஐசிசி நாயகனாக 6 வரலாற்று சாதனை appeared first on Cric Tamil.

Read Entire Article