ARTICLE AD BOX
ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மகேந்திர சிங் தோனி தன்னை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதாக அளித்த வாக்குறுதி குறித்தும், தன்னை பிறகு அவர் பயன்படுத்திக் கொண்ட விதம் குறித்தும் தற்போது சிஎஸ்கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறார். மகேந்திர சிங் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற்றால், ரவிச்சந்திரன் அஸ்வினின் அனுபவம் சிஎஸ்கே அணிக்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதால் அவரை சிஎஸ்கே வாங்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது.
தோனி கொடுத்த வாக்குறுதி
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணிக்கு ஆரம்பத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, அவரை இரண்டாவது ஐபிஎல் சீசனில் சிறந்த முறையில்தான் பயன்படுத்திக் கொள்வதாக பேஸ்புக்கில் மகேந்திர சிங் தோனி வாக்குறுதி அளித்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “அது பேஸ்புக்கில் அரட்டை அடித்த ஆரம்ப நாட்கள். எனக்கு இப்பொழுதும் அது நன்றாக நினைவில் இருக்கிறது. அப்பொழுது மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் என்னை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதாக கூறியிருந்தார்”
சச்சினுக்கு எதிராக கொடுக்கப்பட்ட பந்து
“நான் சிஎஸ்கே அணிக்கு சென்ற பொழுது காயம் பட்ட தோனி வெளியே சென்றார். மேலும் நானும் இரண்டு மூன்று ஆட்டத்தில் விளையாடி என்னுடைய பார்மை இழந்துவிட்டேன். இப்படியான நிலையில் நாங்கள் இருவருமே ஒன்றாகச் சேர்ந்து மீண்டும் அணிக்கு வந்தோம். அப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புதிய பந்தில் பந்து வீச எனக்கு தோனி முதல் வாய்ப்பை கொடுத்தார். அது மிகவும் பெரிய வாய்ப்பு”
இதையும் படிங்க : இனி ஐபிஎல் போட்டிகளை இலவசமாக மொபைலில் பார்க்க முடியாது.. அம்பானி வைத்த டிவிஸ்ட்.. எவ்வளவு பணம்?
“சச்சினுக்கு எதிராக வீச புதிய பந்தை என்னிடம் கொடுத்த தோனி எதையும் சொல்லவில்லை தோள்களை குலுக்கி விட்டு சென்று விட்டார். ஆனால் அந்த நேரத்தில் மைக் ஹசி என்னிடம் பொல்லார்ட் விக்கெட்டை வீழ்த்த முடியுமா என்று கேட்டார். அப்பொழுது நான் ஒரு பந்தை அவருக்கு வெளியில் வீச, அவர் அதை அடிக்க, அந்த பந்து காற்றில் எழும்பியது. அந்த நேரத்தில் திலன் துஷாரா ஓடி சென்று பிடித்து விட்டார். குறுக்கே வந்த முரளி விஜய் பந்தில் இருந்து கண்ணை இழுத்து விட்டார். இது எனக்கு மிகவும் மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.
The post சச்சினுக்கு எதிரா தோனி பந்தை என்கிட்ட கொடுத்தார்.. ஆனா ஹசிதான் அதை பேசினார் – அஸ்வின் பேச்சு appeared first on SwagsportsTamil.