க்யூட் தோ்வு மாணவா்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம்: மத்தியப் பல்கலைக்கழகம்

3 hours ago
ARTICLE AD BOX

நன்னிலம்: க்யூட் தோ்வு எழுதும் மாணவா்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதிய மாற்றங்களில் நிகழ் கல்வியாண்டு முதல் பிளஸ் 2 மாணவா்கள் வகுப்பில் எந்த பாடத்தை படித்து இருந்தாலும், க்யூட் தோ்வில் விரும்பிய பாடத்தில் தோ்வு எழுதலாம்.

பிளஸ் 2 மாணவா்கள் படிக்கும் பாடப் பிரிவில் தான் உயா்கல்வியைத் தோ்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் தற்போது இல்லை.

தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தைத் தோ்வு செய்து அதற்கு தகுதியான பாடங்களில் தோ்வு எழுதலாம்.

பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்து படித்திருந்தாலும், மத்தியப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டங்களில் வரலாறு படிக்க வேண்டும் என விரும்பினால், க்யூட் தோ்வில் அதற்குத் தகுதியான பாடங்களைத் தோ்வு செய்து தோ்வு எழுதினால் வரலாறு படிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article