ARTICLE AD BOX
சென்னை: ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு மார்ச் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான க்யூட் தேர்வு வருகின்ற மே 8ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் என தற்காலிகமான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதியுடன் நிறைவடைகிறது.
விருப்பம் உள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என் என்டிஏ அறிவித்துள்ளது. மேலும் விவரங்களை. https://cuet.nta.nic.in/ என்கிற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். கணினி அடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு முதல் புதிய மாற்றங்களின் படி, க்யூட் தேர்வில் 12ம் வகுப்பில் பாடப்பிரிவிற்கு ஏற்ற பாடங்கள் என்று இல்லாமல், மாணவர்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து அதற்கான தகுதியான பாடங்களுக்கான தேர்வை எழுதலாம். உதாரணத்துக்கு ஒரு மாணவர் 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்து படித்திருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டங்களில் வரலாறு படிக்க வேண்டும் என்றால் க்யூட் தேர்வில் அதற்கான தகுதி பாடங்களை தேர்வு செய்து தேர்வு எழுதினால் அவர் வரலாறு படிக்கலாம்.
அதேபோன்று 12ம் வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படித்திருந்து இளங்கலை அளவில் இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது ஏதோ ஒன்று அறிவியல் பாடம் பிரிவு படிக்க விருப்பப்பட்டால் அதற்கான தகுதி பாடங்களை எடுத்து தேர்வு எழுதி விரும்பக்கூடிய பாடங்களை இளங்கலை பிரிவில் படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post க்யூட் இளங்கலைத் தேர்வு: மார்ச் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.