ARTICLE AD BOX
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில், பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். சமீபகாலமாக சிறை வளாகத்திற்குள் கைதிகள் உயிரிழப்பு நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது கோவை மத்திய சிறையில் இருந்தார்.
இதையும் படிங்க: கோவை: கணவன் - மனைவி சண்டையில் விபரீதம்; மனைவியை சுட்டுக்கொன்று, கணவர் தற்கொலை.!
மயங்கிய நிலையில் உயிரிழப்பு
இந்நிலையில், இன்று அவர் அடைக்கப்பட்ட அறையில் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது, அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிக்கன் ஸ்டைப் வித் மயோனைஸ் சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. 30 நாட்களாக பரிதவித்த துயரம்..!