ARTICLE AD BOX
அண்ணாநகர்: முகூர்த்த நாள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால் இன்றுகாலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 1,800 ரூபாயில் இருந்து 800 க்கும் ஐஸ் மல்லி 1,500ல் இருந்து 600 க்கும் முல்லை 1,200ல் இருந்து 500க்கும் ஜாதி மல்லி 1,200ல் இருந்து 450 க்கும் கனகாம்பரம் 600ல் இருந்து 300 க்கும் அரளி பூ 500 ரூபாயில் இருந்து 150 க்கும் சாமந்தி 200ல் இருந்து 100க்கும் சம்பங்கி 400ல் இருந்து 100க்கும் சாக்லேட் ரோஸ் 240ல் இருந்து 100 க்கும் பன்னீர் ரோஸ் 140ல் இருந்து 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை மீண்டும் குறைந்துள்ளது. 26ம்தேதி சிவராத்திரி என்பதால் நாளை மீண்டும் அனைத்து பூக்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.
The post கோயம்பேட்டில் 2வது நாளாக பூக்கள் விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.