கோடைகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

3 hours ago
ARTICLE AD BOX

பொதுவாகவே கர்ப்பிணி பெண்களுக்கு அதிக நீர் சத்து தேவைப்படும். அதிகம் கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். கோடைகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!அந்த வகையில் தினமும் 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கோடை காலத்தில் நீர் சத்து குறைவாக இருப்பின் கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல், தலைவலி, கை – கால் வீக்கம் போன்றவை ஏற்படக்கூடும். அதுமட்டுமில்லாமல் சர்க்கரை சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.கோடைகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

ஆகையினால் இஞ்சி, சீரகம், தயிர், மாதுளை, பன்னீர், பாசிப்பருப்பு போன்ற குளிர்ச்சியான பொருட்களை கோடை காலத்தில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் காரம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும், எண்ணெய் சார்ந்த பொருட்களையும் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதிலும் மிளகு, ஊறுகாய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவே கூடாது. அதிக அளவில் மிளகு எடுத்துக் கொள்வதனால் உடல் உஷ்ணம் அதிகமாகி கர்ப்பப்பையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.கோடைகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

கோடைகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்லும்போது தலையில் துணி அணிந்து செல்ல வேண்டும். மிகவும் இறுக்கமான துணிகளை அணியாமல் காட்டன் உடைகளை அணிந்து கொள்ளலாம். வெயிலில் அதிக நேரம் நிற்கவே கூடாது. குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பின் கையில் குடிநீர், மோர் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும்போது தலைசுற்றல், தாகம் அதிகரித்தல், அதிக களைப்பு போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். அதேபோல் கோடை காலத்தில் கடுமையான வேலைகளை செய்யாமல் மிதமான வேலைகளில் ஈடுபடுவது நல்லது.கோடைகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

கர்ப்ப காலத்தில் தினமும் 7 முதல் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். போதுமான அளவு ஓய்வும், தூக்கமும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமல்லாமல் கருவில் உள்ள குழந்தைக்கும் ஆரோக்கியமானது.

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.

Read Entire Article