கோடைகாலத்தில் ஏ.சி. பில் குறையணுமா? இந்த 10 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

3 hours ago
ARTICLE AD BOX
  • ஏ.சி யின் உயர் மின்னழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் கேபிள், சுவிட்ச் போன்றவற்றைத் தரமானதாக வாங்க வேண்டும்.

  • அறையின் அளவுக்கு ஏற்ற திறன் கொண்ட ஏ.சி பயன்படுத்தவும். பெரிய அறையாக இருந்தால் குறைந்த செயல் திறன் கொண்ட ஏ.சி யைப் பயன்படுத்தக் கூடாது.

  • கோடை வெயில் வருவதற்கு முன்பு, பயன்படுத்தாமல் இருந்த ஏ.சிகளின் வெளிப்புறத்தில் பறவைகள் அணில்கள் கட்டிய கூடுகள் இருந்தால் அவற்றை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஏ.சி யை சரி செய்தல் வேண்டும். அனுபவமிக்க மெக்கானிக்குகளைக் கொண்டு செய்யவும். ஏ.சி யின் உட்புறம் சுத்தமாக இருப்பது போல அறையின் வெளிப்புறமும் அது சுத்தமாக இருக்க வேண்டும்.

  • ஏ.சி பயன்படுத்தும் வரையில் சூரிய ஒளி நேரடியாக படாமல் இருப்பது நல்லது. பகல் முழுக்க சூடேறி இருக்கும் சுவர்கள் இரவில் குளிர அதிக நேரம் எடுக்கும். அது மாதிரி இருந்தால் திரைச்சீலைகளை ஜன்னலில் போட்டு மூடி வைக்கவும்.

  • மொட்டை மாடியின் சூடு ஏ.சி அறையின் கூரையில் நீண்ட நேரம் இருக்கும். அதனால் அறை குளிர்ச்சி அடைய நேரம் ஆகும். அதை தவிர்க்க ஃபால்ஸ் சீலிங் அமைக்கலாம்.

  • ஏ.சி சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்பதையும் பேன், மோட்டார்கள், பெல்ட், கேஸ் அளவு சரியாக உள்ளனவா என்பதையும் கோடைக்கு முன்னரே பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும்.

  • மாதம் இருமுறை ஏ.சியின் ஃபில்ட்டரை கழட்டி சுத்தம் செய்தால் தூசுகள் நீங்கி நன்றாக இருக்கும். தூய்மையான காற்றையும் அது தரும். ஏ.சி யில் வெப்பம் உருவாகாமலும் இருக்கும்.

  • ஏ.சி யில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாயில் ஏதும் அடைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். அதில் அடைப்பு இருந்தாலும் அறை சீக்கிரம் குளிராது. அறையில் ஏ.சி பொருத்தியுள்ள இடத்தின் இணைப்புகளில் கசிவு இருக்கிறதா? அதே போல கதவுகள், ஜன்னல்களில் இடைவெளிகள் இருந்தாலும் சரி செய்யவும்.

  • ஏ.சி க்களின் நீண்ட நாட்கள் வேலை செய்ய இரவில் அரை மணி நேரம் நல்ல குளிர்ச்சியில் வைத்து விட்டு அதன் பின் 24 டிகிரி செல்சிசியலில் பயன்படுத்தவும்.

  • ஏ.சி இயங்கும் போது நறுமணம் கமழும் வாசனைகள் திரவியங்கள், கெமிக்கல்ஸ், கொசு விரட்டிகள் பயன் படுத்தக்கூடாது. இதனால் காயில் பழுதாகும். ஏ.சி பயன்படுத்துள் அறையில் அதிக பொருட்கள், துணிகள் வைத்தால், அந்தப் பொருட்களின் மீது குளிர்ச்சி படியும். மின் செலவும் அதிகமாகும்.

இதை கருத்தில் கொண்டு ஏ.சி யை முன் கூட்டியே கவனித்து பராமரித்து கோடை வெயிலில் அறையில் குளிரை கூலாக அனுபவியுங்கள்.

இதையும் படியுங்கள்:
முட்டை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் தான்!
AC Maintenance
Read Entire Article