ARTICLE AD BOX
*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
சித்தூர் : கோடை காலம் தொடங்கியதால் குடிநீர் வினியோகம் செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
சித்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கலெக்டர் சுமித் குமார் தலைமையில் சித்தூர் மாவட்ட நகராட்சி அதிகாரிகளுடன் மற்றும் எம்பிடிஓ அதிகாரிகளுடன் பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் கலெக்டர் சுமித்குமார் பேசியதாவது: தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் சித்தூர் மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் கோடை காலத்தை முன்னிட்டு குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளை தொடர்ந்து சுத்தம் செய்கிறார்களா இல்லையா என மண்டல தனி அலுவலர்கள் மேற்பார்வையிட வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி செயலர்கள் மற்றும் பொறியாளர் உதவியாளர்களை கொண்டு மேல்நிலை தொட்டிகளை சுத்தமாக வைத்து, திறந்தவெளி மலம் கழித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
மார்ச் மாத இறுதிக்குள் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்து, அடுத்த மூன்று மாதங்களுக்கு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி, சுத்தம் செய்த பின் புவிசார் குறியிடலுடன் புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்கள் பழுது ஏற்பட்டால், சாக்கடை நீரால் மாசடைந்து, நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 308 கை பம்புகள் பழுதாகி உள்ளது. அவற்றில், 233 கை பம்புகள் சரி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், 190 பைப் பைப் லைனில் தண்ணீர் கசிவுகள் கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை அனைத்தையும் சரி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட முழுவதும் 225 பம்ப் செட்கள் பழுது ஏற்பட்டுள்ளது.
அவற்றில் 221 பம்பு செட்டுகள் சரி செய்யப்பட்டுள்ளன. 4 குடியிருப்புகளுக்கு போக்குவரத்து மூலமாகவும், 3 குடியிருப்புகளுக்கு டைஅப் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஜில்லா பரிசுத் முதன்மை செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட நகராட்சி அதிகாரிகள் எம்பிடிஓ அதிகாரிகள், பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post கோடை காலம் தொடங்கியதால் குடிநீர் வினியோகம் செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை appeared first on Dinakaran.