ARTICLE AD BOX
கொல்கத்தா: இந்தியன் ப்ரீமியர் லீக்(ஐபிஎல்) 18-ஆவது கிரிக்கெட் தொடரானது (ஐபிஎல் 2025) இன்று(மார்ச் 22) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, இரவு நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்துவீசி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இன்றைய போட்டியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டியாகும்.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 18 ஆண்டுகளாக அதன் ஒவ்வொரு தொடரிலும் தவறாது விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடக்கவிழாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது.
விராட் கோலியின் கிரிக்கெட் சீருடையில் ‘18’ என்ற எண்ணே குறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், அதனை மையப்படுத்தி, இன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதில் ‘18’ என்ற எண் பெரிதாக குறிக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.