கொழும்பில் இரண்டாவது தடவையாக நடைபெறும் கிறிஸ்தவ தமிழ் இலக்கிய விழா!

1 day ago
ARTICLE AD BOX

கிறிஸ்தவ தமிழ் இலக்கிய விழா மே மாதம் 12, 13 ஆம் திகதி கொழும்பிலுள்ள தேசிய நூலகம் (சுதந்திர சதுக்கம் அருகில்) நடைபெற உள்ளது. தமிழ் இலக்கியத்திற்கு கிறிஸ்தவர்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வாறாக உரைநடை, நவீன இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, மொழிபெயர்ப்பு, மொழியியலாளர்கள், அகராதி மற்றும் பல வகைகளை உள்ளடக்கிய புதிய தமிழ் எழுத்துரு அமைப்பை அறிமுகப்படுத்தி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டதோடு, கிறிஸ்தவ கவிஞர்களால் தமிழில் பல கவிதைகள் எழுதப்பட்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்தோடு கிறிஸ்தவர்கள் கருத்தரங்குகள் பலவற்றை நடத்தியும் தமிழுக்கும், கிறிஸ்தவ இலக்கியத்திற்கும் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்வாறாக அந்த காலத்திலிருந்தே பல இலக்கியங்களை பாதுகாத்து பதிவு செய்து வெளியிட்ட கிறிஸ்தவர்கள் மத்தியில் மேலும் இலக்கிய ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், கிறிஸ்தவ இலக்கியத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கிறிஸ்தவ இலக்கிய விழா கொழும்பில் இரண்டாவது தடவையாக நடைபெறுகிறது.

தேசிய நூலகத்தின் அருமையான சுற்றுசூழலில் நடைபெறும் இவ்விழாவிற்கு, இலங்கை மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் கிறிஸ்தவ தலைவர்களும், கிறிஸ்தவ எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும், இறையியல் கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள். கிறிஸ்தவர்கள் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் செய்யும் பங்களிப்பையும், அவர்களுடைய வரலாறு தொட்ட பங்களிப்பையும் இவ்வுலகத்திற்கு காட்டுவதும் விழாவின் நோக்கமாகும்.

விழாவில் புதிய வேதாகமம் மொழிபெயர்ப்பு வெளியிடப்படும் மற்றும் புத்தகங்கள் வெளியீடு, எழுத்தாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள், பல கருத்தாடல்கள், பட்டிமன்றங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்தக கண்காட்சிக்கான அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக விழாவில் சிறந்த புத்தகங்களுக்கான தோமஸ் மில்டன் கிறிஸ்தவ இலக்கிய விருது முதல் தடவையாக கிறிஸ்தவ நூல்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. உலகில் தமிழ் கிறிஸ்தவ நூல்களுக்கு இப்படியொரு விருதுகளும், அத்தோடு பரிசுகளும் கொடுக்கப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படியுங்கள்:
அயல்நாட்டு விருந்தினர்களுக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். திரையிடச் சொன்ன தமிழ் சினிமா எது தெரியுமா?
Christian Tamil Literature Festival

வாசிப்பு பழக்கமே சிந்தனையை தூண்டும். வாழ்வில் மேலோங்க வாசிப்பு வழி வகுக்கும். “புத்தகத்தைப் போல ஒரு விசுவாசமான நண்பன் இல்லை” என்றார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. இலக்கியத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பலனையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தான் சர்வ வல்லவர் தன் வார்த்தைகளை புத்தக வடிவில் நம் கையில் தந்துள்ளார். அதுபோல கிறிஸ்தவ இலக்கிய உலகில் தங்களது திறமைகளை வளர்த்து சாதிக்க ஆர்வமுள்ளவர்களும், வாலிபர்களும், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு இலக்கியத்தின் பலனையும் அதன் பயனையும் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு உலகளாவிய பல தமிழ் வேதவிளக்க நூல்கள், ஆங்கில ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியர், ஆசியாவில் பல கல்லூரிகளில் இறையியல் கற்பித்துள்ள முனைவர் எம் மார்க் அல்ரோய் அவர்களை markalroy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், எழுத்தாளர் சாந்தி ஜொ அவர்களை 0094-761769689 என்ற வாட்ச்ப் இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
'சர்வேயர்' விண்கலத்தில் பயணித்த தமிழ் ஒலிச் சுருள்!
Christian Tamil Literature Festival
Read Entire Article