கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

5 hours ago
ARTICLE AD BOX

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

Annamalai
ஊழல் மற்றும் கொலைகளை மறைக்கவே மறுசீரமைப்பு என்னும் மெகா நாடகம் நடத்தப்படுவதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து, கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, இன்று தமிழக பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 
 
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு, தமிழக பாஜகவினர் அவரவர் வீட்டின் முன்பு, தமிழகத்தில் தொடர்ந்து வஞ்சித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து, கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சென்னையில், பனையூரில் உள்ள அண்ணாமலையின் இல்லத்தின் வெளியே, அவர் தனது ஆதரவாளர்களுடன் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது,   "தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஊழல் ஆகியவற்றை மறைக்கவே இந்த மறுசீரமைப்பு மெகா நாடகம் நடத்தப்படுகிறது" என்ற பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
Read Entire Article