ARTICLE AD BOX
கொசுவர்த்தியால் இவ்வளவு பெரிய ஆபத்து உள்ளதா..!! அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
அனைத்து வீடுகளிலுமே கொசு தொல்லை என்பது கண்டிப்பாக இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் பக்கத்தில் மாடு ஆடு போன்றவையும் தண்ணீர் தேங்கினாலும் மலைக்காலங்களிலும் கொசு என்பது அதிகமாக இருக்கும். இந்த கொசு தொல்லையை ஒழிப்பதற்கு பலவிதமான மருந்துகள் வந்தாலும் ஒரு சிலர் மட்டும் கொசுவர்த்தியை தான் இன்றைக்கும் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் கொசுவர்த்தி எவ்வளவு ஆபத்து என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தினசரி வாழ்க்கையில் கொசுவை ஒழிப்பதற்கு கொசுவர்த்தியை தினமும் பயன்படுத்துவதால் நம் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படும். என சமீபத்தில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சில வீடுகளில் கொசுவை ஒழிப்பதற்கு 5 மணிக்கே வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தி விட்டு கொசுவர்த்தியை பொறுத்து விட்டு அவர்கள் உள்ளே இருப்பார்கள் இப்படி செய்தால் கண்டிப்பாக நுரையீரல் பிரச்சினை ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கல்லீரல் பிரச்சனை தோல் பிரச்சினை மூச்சு விடுவதில் சிரமம் என பல பிரச்சினைகள் இதனால் ஏற்படும்.