கைமாறும் கேப்டன் பதவி.. ரோஹித் சர்மா அல்லது பும்ரா தான் முதல் சாய்ஸாம்! ஐபிஎல் வேற வந்தாச்சே

22 hours ago
ARTICLE AD BOX

கைமாறும் கேப்டன் பதவி.. ரோஹித் சர்மா அல்லது பும்ரா தான் முதல் சாய்ஸாம்! ஐபிஎல் வேற வந்தாச்சே

Cricket
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த சில மாதங்கள் ரோஹித் சர்மாவுக்கு வெற்றி தோல்வி என இரண்டும் கலந்தே இருந்துள்ளது. அடுத்து இப்போது ஐபிஎல் போட்டிகளும் தொடங்கும் நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இதற்கிடையே அவரது கேப்டன்சி குறித்து இப்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மாவுக்கு கடந்த சில மாதங்கள் வெற்றி தோல்வி கலந்த ஒன்றாகவே இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடிய இந்திய அணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. ரோஹித் சர்மாவால் பேட்ஸ்மேனாகவும் சோபிக்க முடியவில்லை. இதனால் கடைசி போட்டியில் அவராகவே விளையாடாமல் ஒதுங்கிவிட்டார்.

Rohit Sharma ipl 2025 2025

ரோஹித் சர்மா

அதேநேரம் சாம்பியன்ஸ் டிராபியில் அசுர பாய்ச்சலை நிகழ்த்தினார். பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் கலக்கினார். லீக் சுற்று முதல் ஒரு தோல்வியைக் கூடப் பெறாமல் 100% வெற்றியுடன் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. இது ரோஹித் சர்மாவின் நம்பிக்கையைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்தகட்டமாக இப்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது.

இரண்டு மாதங்கள் ஐபிஎல் தொடரிலேயே போய்விடும். அதன் பிறகு ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபி முடிந்த பிறகு, டெஸ்ட் போட்டிகளில் இருந்தே ரோஹித் சர்மா மொத்தமாக விலகவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி வெற்றி என்பது மொத்தமாக அனைத்தையும் மாற்றிப் போட்டுள்ளது.

கேப்டன் பதவி

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோஹித் நிச்சயம் இருப்பார் என்ற போதிலும் கேப்டன் பதவிக்கு அவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பது குறித்து இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று தெரிகிறது. பும்ரா ஃபிட்டாக இருந்தால் அவருக்கு கேப்டன்சி போய் இருக்கும். ஆனால், பும்ரா உடல்நிலை கேள்விக்குறியாக உள்ளதே இப்போது சிக்கல். இருவரையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கோலி மட்டும் சீனியர். ஆனால், அவருக்கு கேப்டன்சியில் விருப்பம் இல்லை. மற்ற அனைவரும் இளம் வீரர்களாக உள்ளதால் கேப்டன்சி யாருக்கு என்பதில் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை.

காரணம் என்ன

ஆனால், சம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் தொடரில் ரோஹித்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடரில் மீண்டும் அவருக்கு கேப்டன்சி கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் சமீப காலமாக ரோஹித் கேப்டன்சியில் இந்திய டெஸ்ட் அணியால் பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி ஆறு தோல்விகளைச் சந்தித்தது. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. முதல் போட்டி லீட்ஸில் நடைபெறும்.

பிசிசிஐ சொல்வது என்ன

கேப்டன்சி தேர்வு குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "கேப்டன்சி குறித்து அதிகாரப்பூர்வ மாற்றம் எதுவும் இல்லை.. இதனால் டெக்னிக்கலாக இப்போதும் ரோஹித் சர்மா தான் கேப்டனகா இருக்கிறார். ஃபார்மில் அல்லாத பல பேட்ஸ்மேன்கள் இருந்தால் அணிக்குச் சிக்கல் என அவரே தானாக முன்வந்து சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் விளையாடவில்லை.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்தியா எந்த டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை.. எனவே டெஸ்ட் கேப்டன் பதவியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்று ரோஹித் ஒருபோதும் கூறவில்லை. அதேநேரம் இங்கிலாந்து தொடர் குறித்து இன்னும் தெளிவான முடிவு எதுவும் செய்யப்படவில்லை.

மீண்டும் அவமானப்பட்ட பாகிஸ்தான்.. தி ஹண்ட்ரட் தொடரில் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட ஏலம் போகலையாம்!
மீண்டும் அவமானப்பட்ட பாகிஸ்தான்.. தி ஹண்ட்ரட் தொடரில் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட ஏலம் போகலையாம்!

எப்போது முடிவு தெரியும்

ஐபிஎல் போட்டிகளின் போது தேர்வுக் குழுவிற்கு ஓய்வு கிடைக்கும். எல்லா போட்டிகளையும் நிச்சயம் கவனிப்பார்கள்.. எனவே ஐபிஎல் தொடங்கி சில நாட்களில், இங்கிலாந்து தொடருக்கு என்ன திட்டம் என்பது தெரிந்துவிடும். (பயிற்சியாளர்) கௌதம் கம்பீரின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

கம்பீர்

ஒரு வீரர் எவ்வளவு பெரிய நட்சத்திர வீரராக இருந்தாலும், அவரது தற்போதைய ஃபார்ம் என்ன என்பதைக் கருத்தில் கொண்டே கம்பீர் முடிவெடுப்பார். டீம் ஃபர்ஸ்ட் என்பதே அவரது பாலிசி.. எனவே, இங்கிலாந்து தொடரில் எதாவது பெரிய மாற்றம் வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள்.

More From
Prev
Next
English summary
A massive revelation has emerged in the Rohit Sharma captaincy row, with reports suggesting that a consensus has not been reached on his leadership role (மிக விரைவில் தொடங்கும் ஐபிஎல் கேப்டன் பொறுப்பில் ரோஹித் சர்மா வர வாய்ப்பு): IPL 2025 is starting very soon, Who will lead Team India Rohit Sharma.
Read Entire Article