கே.எல். ராகுலுக்கு இல்லை.. அப்போ டெல்லியின் துணை கேப்டன் இவரா?

1 day ago
ARTICLE AD BOX

டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேறிய நிலையில், டெல்லி அணியால் வாங்கப்பட்ட கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், கேப்டன் பதவி கே.எல்.ராகுலையும் தேடி சென்றது. ஆனால் அதனை கே.எல்.ராகுல் நிராகரித்து விட்டார். 

இதையடுத்து டெல்லி அணியில் ரிஷப் பண்டிற்கு அடுத்தபடியாக தற்போது அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கும் அக்சர் பட்டேலுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. அதையும் ஏற்றுக்கொண்டு வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை அக்சர் பட்டேல் வழிநடத்த உள்ளார். இந்த நிலையில், அக்சருக்கு உறுதுணையாக துணை கேப்டனாக இருந்தாவது கே.எல்.ராகுல் செயல்படுவாரா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி அணி வேறு ஒருவரை துணை கேப்டன் பதவிக்கு நியமித்துள்ளது. 

துணை கேப்டன் டு பிளெசிஸ் 

இன்று (மார்ச் 17) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்திய பாஃப் டு பிளெசிஸை ஐபிஎல் 2025 தொடருக்கான துணை கேப்டனாக அறிவித்துள்ளது. 

மேலும் படிங்க: இந்த 3 முக்கிய வீரர்கள் இல்லை.. சிஎஸ்கே அணிக்கு ஆபத்தா?

அந்த வீடியோவில் டு பிளெசிஸ், நான் டெல்லி அணியின் துணை கேப்டன். மிகவும் உற்சாகமாக உள்ளேன். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக உள்ளது. சக வீரர்கள் அற்புதமாக இருக்கிறார்கள். நிச்சயமாக நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என கூறி இருக்கிறார். 

ஆர்சிபி அணியை வழிநடத்திய பாஃப் டு பிளெசிஸ், இந்த அண்டு டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். மெகா ஏலத்தில் அவரை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்த நிலையில், அவர் டெல்லி அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ரிஷப் பண்டிற்கு எதிராக முதல் போட்டி 

ஆர்சிபி அணியை வழிநடத்திய பாஃப் அந்த அணி இதுவரை இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து வந்துள்ளார். தொடக்க வீரராகவும் சிறப்பாக செயல்பட்டார். டெல்லி அணி வரும் மார்ச் 24ஆம் தேதி ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. 

முன்னதாக அக்சர் பட்டேல் கேப்டனாக பொறுப்பேற்றது குறித்து பேசுகையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது எனக்கு மிகப்பெரிய கெளரவம். என் மேல் நம்பிக்கை வைத்த நிர்வாகத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தெரிவித்தார்.  

மேலும் படிங்க: பரிதாப நிலையில் லக்னோ அணி.. வேறு வழியின்றி ஷர்துல் தாக்கூரிடம் சென்ற சஞ்சீவ் கோயங்கா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article