கெட்டிமேளம் : மகேஷ்க்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ்.. என்ட்ரி கொடுக்கும் பிரபலம் - இன்றைய அப்டேட்

3 days ago
ARTICLE AD BOX

கெட்டிமேளம் : மகேஷ்க்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ்.. என்ட்ரி கொடுக்கும் பிரபலம் - இன்றைய அப்டேட்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியிடம் பேச துளசி நீங்க ஆசைப்பட்ட பொண்ணோட உங்களுக்கு கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள் என சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

நேற்றைய எபிசோடில் வெற்றிக்கு போன் செய்த துளசி தன்னுடைய மகளை காப்பாற்றியதற்காக நன்றி சொல்லி இருக்கிறார். அதோடு தன்னுடைய மகளுக்கு எந்த கடையில் தோசை வாங்கி கொடுத்தீங்க அது அவளுக்கு ரொம்ப புடிச்சி இருக்கிறது என்று சொல்ல, அதற்கு வெற்றியும் கடையின் அட்ரஸ் சொல்கிறார்.

zee Tamil Chayasingh Gettimelam serial

அதுபோல அந்த நேரத்தில் தான் வெற்றிக்கு பெண் பார்ப்பதற்காக புரோக்கர் கொண்டு வந்த போட்டோக்களை வெற்றியின் அப்பா பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் இரண்டு பெண் போட்டோவை மட்டும் செலக்ட் செய்து அதை வெற்றியிடம் காட்டுகின்றனர். அந்த நேரத்தில் கரண்ட் போய்விடுகிறது.

நல்ல விஷயம் பேசுற நேரத்தில் கரண்ட் போய்விட்டதே என்று வெற்றியின் அப்பா அப்செட்டாகிறார். ஆனால் வெற்றி துளசி தான் தன்னிடம் பேசினார் என்று தெரியாமலேயே அவரிடம் கொஞ்சி கொஞ்சி பேசுகிறார். அதை பார்த்து அவருடைய நண்பர்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து இன்று, மகேஷ் பத்திரிகையுடன் வீட்டிற்கு வந்து முதல் பத்திரிகையை கொடுத்து எல்லாரது காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான். இதனையடுத்து லட்சுமி சிவராமன் ஆகியோர் ரகுராம் மற்றும் கேசவனுடன் வெற்றியின் வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்கின்றனர்.

zee Tamil Chayasingh Gettimelam serial

எம். எல்.ஏ தனது மூத்த மகனையும் மருமகளையும் அறிமுகம் செய்து வைக்கிறான், என் இரண்டாவது பையன் வெற்றி இப்போ வந்துடுவான் என்று சொல்ல வெற்றியும் வீட்டிற்கு வருகிறான். வெளியில் கேசவன் வண்டியை பார்த்த அவன் வெளியே கிளம்பி சென்று விடுகிறான்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு எளிமையான திருமணம்.. கணவர் இவர் தானா? குவிந்த சீரியல் பிரபலங்கள்
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு எளிமையான திருமணம்.. கணவர் இவர் தானா? குவிந்த சீரியல் பிரபலங்கள்

அடுத்து கோவிலுக்கு வந்த லட்சுமி அங்கு வெற்றியை சந்திக்கிறாள். வெற்றி லட்சுமியை வீட்டில் டிராப் செய்ய லட்சுமி அஞ்சலியின் கல்யாண பத்திரிகையை கொடுத்து அழைக்க வெற்றி அக்கா இது நம்ம வீட்டு கல்யாணம், கண்டிப்பா வந்துடுறேன் என்று சொல்கிறான்.

 முதல் இடத்தை தவறவிட்ட சிங்க பெண்ணே.. மேலே வந்த எதிர்பாராத சீரியல்
Top 10 Tamil Serials: முதல் இடத்தை தவறவிட்ட சிங்க பெண்ணே.. மேலே வந்த எதிர்பாராத சீரியல்

அதனை தொடர்ந்து மகேஷ் மீண்டும் வீட்டிற்கு வர காரை பார்த்த லக்ஷ்மிக்கு ஸ்ரீகாந்தை நியாபகம் வர காரை பயன்படுத்த வேண்டாம் என்று அட்வைஸ் கொடுக்க மகேஷ் அஞ்சலிக்கு போன் செய்து காரணம் கேட்க துளசி கல்யாணத்தில் நடந்த விஷயத்தை சொல்கிறாள்.

இங்கே மோனிகா தியாவை நினைத்து வருத்தப்பட ஜெகன் மற்றும் அவனது அம்மா தியாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடுகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம் .

zee Tamil Chayasingh Gettimelam serial

அதுபோல இந்த சீரியலில் வெற்றிக்கு பார்த்த பெண்ணாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஷாலினி காட்டப்பட்டிருக்கிறார். அதனால் அவர் இந்த சீரியலில் இனி என்ட்ரி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி இன்று பல சேனல்களில் நடித்த நடிகர்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஷாலினியின் வருகை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
English summary
Gettimelam serial (கெட்டிமேளம் சீரியல்): Today, Mahesh comes home with the magazine and gives the first newspaper and falls on everyone's feet. Subsequently, Lakshmi Sivaraman comes to the house of victory with Raghuram and Kesavan. M. LA introduces his eldest son and daughter -in -law, and my second boy is successful to say that the victory will come now. Kesavan sees the car outside and leaves him.
Read Entire Article