ARTICLE AD BOX
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கெட்டி மேளம்’ சீரியல்.
கெட்டி மேளம் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் அஞ்சலி தல தீபாவளியை கொண்டாட லட்சுமி வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மிஸ் பண்ணுவதாக சொல்லும் தியா
அதாவது, அஞ்சலியை பார்த்ததும் தியா நாங்க எல்லாரும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணோம் என்று சொல்கிறாள். அதன் பிறகு அஞ்சலி மகேஷிடம் வந்து அக்கா கூட தான் நான் எப்போதும் தூங்குவேன். இன்னைக்கு நான் அக்காவோட படுத்து தூங்கவா என்று கேட்க மகேஷ் முதலில் கோபித்துக் கொள்ள இதனால் அஞ்சலி வருத்தம் அடைய பிறகு அதை கவனித்த மகேஷ் இதெல்லாம் ஏன் செல்லம் என்கிட்ட கேக்குற நீ போய் தூங்கு என்று சொல்கிறான்.
அதே நேரத்தில் வீட்டில் நடக்கிறது எல்லாம் அஞ்சலி அவங்க வீட்ல கிட்ட சொல்லிட்டா என்ன பண்றது என மகேஷ் பதட்டம் அடைகிறான். அதன் பிறகு அஞ்சலி அவங்க அப்பா அம்மா கிட்ட என்ன பேசுறா என ஒட்டு கேட்க அஞ்சலி மகேஷ் குறித்து நல்ல விதமாகவே சொல்கிறாள்.
பிறகு தியா மற்றும் துளசி ரூமில் இருக்க அஞ்சலி நடுவில் வந்து படுக்க துளசி இங்க எதுக்கு வந்த? மகேஷ் ஏதாவது தப்பா நினைக்க போறாரு என்று கேட்க அஞ்சலி அவரிடம் சொல்லிட்டு தான் வந்தேன். அவரும் உங்க கூட போய் தூங்க சொன்னாரு என்று சொல்கிறாள். பிறகு தியா ட்ரீட்மெண்ட் குறித்து விசாரிக்கிறாள். மகேஷிடம் உதவி கேட்பதாக சொல்ல துளசி வேண்டாம் இப்போது எனக்கு நல்ல வேலை கிடைச்சிருச்சு. நானே பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறாள்.
இன்விடேஷன் கொடுக்கும் ஈஸ்வரமூர்த்தியின் பி ஏ
இதனைத் தொடர்ந்து மறுபக்கம் வெற்றியின் வீட்டில் கேசவன், தீபா ஆகியோர் வந்திருக்க ஈஸ்வரமூர்த்தியின் பி ஏ ஒரு இன்விடேஷனை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க என் பொண்ணோட கல்யாணத்தை இந்த மாதிரி பெருசா நடத்தணும்னு ஆசைப்பட்டேன் ஆனா எதுவுமே நடக்காம போயிடுச்சு என கேசவனிடம் கோபப்படுகிறார்.
இதை கேட்ட வெற்றி இப்ப எதுக்கு மாமாவை திட்டிகிட்டு இருக்கீங்க? அவர் கூடிய சீக்கிரம் பிசினஸ் பண்ண போறாரு.. வாழ்க்கையில நல்லா வருவாரு என முதல்முறையாக கேசவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறான். இதை கேட்டு தீபா, தீபாவின் அம்மா என எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | எம்புரான் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்! வெளியான முக்கிய அப்டேட்!
மேலும் படிக்க | கார்த்திக் சுப்புராஜ் பிரத் டே ஸ்பெஷல்.. வெளியான ரெட்ரோ அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ