கெட்ட கொழுப்பை அகற்றும் பத்து எளிய உணவுகள்!

8 hours ago
ARTICLE AD BOX

நமது உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பானது இரண்டு விதமாக அமைந்துள்ளது. முதலாவது நல்ல கொழுப்பு (HDL High Density Lipoprotein). இரண்டாவது கெட்ட கொழுப்பு (LDL – டow Density Lipoproteins).

நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவானது அதிகரிக்கும் போது இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைபட்டு ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. நல்ல கொழுப்பானது (HDL) இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்ற உதவுகிறது.

நாம் கீழ்காணும் எளிய உணவுகளை அன்றாடம் நமது உணவில் சேர்த்து கெட்ட கொழுப்பை நமது உடலில் இருந்து அகற்றி ஆரோக்கியமாக வாழலாம். இதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பூண்டு:

பூண்டு கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் இவை அதிக அளவில் உபயோகிக்கப்படுகின்றன. பூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள் இதயம் சிறப்பாக செயல்பட பெரிதும் உதவுகிறது.

பசலைக்கீரை:

பசலைக்கீரையில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் பசியைக் குறைத்து விடுகிறது. இதனால் அதிக உணவை சாப்பிட வேண்டும் என்ற மனநிலை ஏற்படுவதில்லை. பசலைக்கீரை எளிதில் கிடைக்கும் ஒரு சிறந்த உணவு. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தக்காளி:

தக்காளியில் அதிக அளவில் லைகோபின் இருக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தில் பெரிதும் உதவுகிறது. தக்காளி உடலின் எடையை குறைக்கும். இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்க உதவுகிறது.

கொட்டைகள்:

பாதாம் பருப்பு, அக்ரூட், வேர்க்கடலை முதலான கொட்டைகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுவது இதயத்தின் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது என்று கூறப்படுகிறது. இவற்றில் நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளன. நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்தால் கெட்ட கொழுப்பின் அளவு தானாகவே குறையும். தினமும் இதில் ஏதாவது ஒரு கொட்டையை சாப்பிட்டு வந்தால் அது ஐந்து சதவிகிதம் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

இஞ்சி:

இஞ்சியில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் கெட்ட கொழுப்பினைக் கரைக்க பெரிதும் உதவுகின்றது. சமையலில் தினமும் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க நிச்சயம் உதவும்.

சீரகம்:

நமது சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இடம் பெற்றுள்ள சீரகம் நமது உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவை வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்றவும் உதவுகிறது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தயம்:

வெந்தயத்தை தினமும் சிறிதளவு உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து உட்கொண்டால் இது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும். வெந்தயத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பொறாமைப்படும் போது உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள்!
bad cholesterol

மஞ்சள்:

மஞ்சள் இரத்தத் தமனிகளின் உட்புறச் சுவர்களில் பிளேக் படிவுகள் படிவதைக் குறைக்கிறது. மேலும் இது கெட்ட கொழுப்பின் அளவையும் கணிசமாகக் குறைக்கிறது. மஞ்சளை ஒரு சிட்டிகை அளவு எடுத்து பாலில் போட்டு சூடாக்கிக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கானாங்கெளுத்தி மீன்:

தமிழகத்தில் அதிக அளவில் கிடைக்கும் மீன் கானாங்கெளுத்தி மீன். இதில் மிக அதிக அளவில் ஒமேகா 3 சத்து உள்ளது. மற்ற மீன்களைக் காட்டிலும் இந்த மீன்களின் விலை சற்று குறைவுதான். இந்த மீனில் உள்ள ஒமேகா 3 சத்தானது கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் திறன் வாய்ந்தது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த மீனை குறைந்த அளவு எண்ணெய் சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம்.

ஆளி விதை:

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து முதலானவை அதிக அளவில் உள்ளன. இவற்றை அவ்வப்போது சாப்பிட்டால் கெட்ட கொழுப்பின் அளவு குறையத் தொடங்கி நல்ல கொழுப்பின் அளவு அதிகமாகும். இவற்றின் விலையோ குறைவுதான்.

இதையும் படியுங்கள்:
ஓமம்: ஆரோக்கியத்தின் பொக்கிஷம்!
bad cholesterol
Read Entire Article