கூடுதல் உப்பு ரொம்பவே தப்பு! சிறுநீரக பாதிப்புக்கு 10வழி பாதுகாப்பு!

19 hours ago
ARTICLE AD BOX

அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை அளவு, மது அருந்துவது, உடல் பருமன், சிறுநீரக கற்கள், வலி நிவாரண மாத்திரைகள், புற்றுநோய் மேலும் பல வியாதிகளால் சிறுநீரகம் கெடுகிறது. இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினால் சிறுநீரகத்தை பாதுகாக்கலாம். அந்த வகையில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் 10 வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதா மாதம் தங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து கொள்வது மிகவும் அவசியம். அதோடு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படுவதை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.

2. ஒரு நாளில் ஒருவருக்குத் 5 கிராம் சமையல் உப்பு மட்டுமே தேவை என்பதால் உப்பு நிறைந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், சோடா தண்ணீர் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்து விட வேண்டும் .

அதைத் தவிர உப்பு கூடுதலாக உள்ள பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ணஉணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

3. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்தத்தில் இருக்க வேண்டிய சரியான சர்க்கரை அளவான120 மி.கி./டெசி லிட்டர் என்ற அளவிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு நீரிழிவு நோயாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 முக்கிய வழிகள்!
10 Ways to Keep Your Kidneys Healthy

4. பீடி, சிகரெட் ஆகியவற்றில் உள்ள ‘நிகோட்டின்’ நச்சுவானது ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடும். இதனால், ரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அறவே புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

5. சிறுநீரகத்தில் இருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் சீராக வெளியேற நாம் தினசரி 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். குறிப்பாக, சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கட்டாயமாக மருத்துவர் ஆலோசனைப்படி தண்ணீர் குடிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
இந்த மாத்திரைகள் கட்டாயம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் ஜாக்கிரதை!
10 Ways to Keep Your Kidneys Healthy

6. வீரியம் உள்ள மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகள் மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரை, மருந்துகள், சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வாங்கி சாப்பிடவும் கூடாது. சுய மருத்துவமும் செய்யக் கூடாது.

7. சிறுநீரகப் பாதை சுத்தமாக இருக்க, அதிலுள்ள கழிவுகள் உடனுக்குடன் வெளியேற நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், உடனே கழித்து விட வேண்டும்.

8. சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதை தடுக்க தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்றாகச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். மதுபானங்களில் உள்ள இரசாயனங்கள் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யும் என்பதால் மது பழக்கத்தை விட்டு விட வேண்டும்.

10. உடற்பயிற்சி சிறுநீரகத்தை பாதுகாக்கும் என்பதால் தினமும் எளிய பயிற்சியான நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் . தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்கி ஓய்வெடுப்பதும் சிறுநீரக பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

- மேற்கூறிய பத்து செயல்களை தவறாமல் கடைபிடிக்க, கண்டிப்பாக சிறுநீரகம் பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுநீரக அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம், கவனம் தேவை!
10 Ways to Keep Your Kidneys Healthy
Read Entire Article