குஷ்பு தொடரில் இணையும் பெண் நடனக் கலைஞர்!

2 hours ago
ARTICLE AD BOX

நடிகை குஷ்பு நாயகியாக நடித்துவரும் புதிய தொடரில் நடனக் கலைஞர் பானுமதி நடிக்கவுள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பு, சின்ன திரையில் பல்வேறு தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் நடித்த சின்ன சின்ன ஆசை, அர்த்தமுள்ள உறவுகள், மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி, நம்ப குடும்பம், ருத்ரா, பார்த்த ஞாபகம், லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் மிகவும் பிரபலமடைந்தவை.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஒளிபரப்பான நம்ம வீட்டு மகாலட்சுமி, நந்தினி ஆகிய இரு தொடர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவ்வாறு தொடர்ந்து நடித்துவரும் குஷ்பு, தனது கணவர் சுந்தர்.சி -யின் சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளதோடு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலில் நடுவராகவும் பங்கேற்றார்.

தற்போது மீண்டும் சின்ன திரை தொடரில் நடிக்கவுள்ளார். இவர் சரோஜினி எனப் பெயரிடப்பட்ட தொடரில் நாயகியாக நடித்துவருகிறார்.

டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடரின் படபிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

சரோஜினி தொடரில் நடிகை குஷ்புவுடன் சேர்ந்து நடனக் கலைஞர் பானுமதி நடிக்கவுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் நடித்துவருகிறார்.

அத்தொடரில் இவரின் நடிப்பு பலதரப்பில் பாராட்டப்பட்டதால், தற்போது குஷ்பு இவருக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலர் பானுமதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | உள்ளுக்குள் இருக்கும் தமிழ்ப் பெண்! கேரள நடிகை பகிர்ந்த விடியோ!

இதையும் படிக்க | நீ நான் காதல் தொடரில் 3வது முறையாக மாறும் நடிகை! மீண்டும் சாய் காயத்ரி!

Read Entire Article