ARTICLE AD BOX
திருமணம் ஆன பிறகு குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினர் வாரத்தில் ஒரு முறையாவது எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் யோக வித்தியா கூறுகிறார்.
இதுகுறித்து விரிவாக அவர் எத்னிக ஹெல்த் கேர் என்ற அவருடைய யூடியூப் பக்கத்தில் பேசியிருப்பதாவது,
குழந்தைக்கு முயற்சி செய்பவர்கள் வாரத்தில் ஒரு முறையாவது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
இதனால் விரைவாக கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது பொதுவாகவே என்னை குளியல் எடுக்கும் போது ஆண்களுக்கு விதைப்பையில் இருக்கும் சூடு குறையும் இதனால் வெளியேறும் விந்தணுக்கள் சத்துள்ளதாக வெளியேறும் என்கிறார்.
Oil Bath எடுப்பதால் திருமண தம்பதியருக்கு ஏற்படும் நன்மைகள் | Dr. B.Yoga Vidhya #tips
அதே மாதிரி பெண்களுடைய கர்ப்பப்பையும் விந்தணுக்கள் சென்ற விந்தணுக்கள் ஐந்து நாட்கள் வரை உயிரோடு இருக்க வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி எண்ணெய் தேய்த்து குளிப்பதால் மற்ற சில பயன்களும் உள்ளன. அது உடலில் உள்ள அதிகபடியான சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, உடலின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை சூடு சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
எண்ணெய் தேய்த்தவுடன் உடனே குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் போது எண்ணெய்யில் உள்ள சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.