ARTICLE AD BOX
குழந்தைகளை காலையில் எழுப்புவது, குளிக்க வைப்பது, உணவு ஊட்டுவது, பள்ளிக்கு தயார்படுத்துவது ஆகியவை பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். சில குழந்தைகள் காலை உணவு சாப்பிட்டு விட்டு தாங்களாகவே தயாராகி விடுவார்கள். ஆனால் சிலருக்கோ உணவு ஊட்டுவது முதல் குளிப்பாட்டுவது வரை என அனைத்தையும் அவர்களின் பெற்றோர்கள் தான் செய்ய வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்கள் அலுவலகம் செல்லும் அவசரத்தில் சில தவறுகளை செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தைகள் மன அழுத்தம் இல்லாமல் பள்ளிக்கு சென்றால் அந்நாள் முழுவதும் நன்றாக இருக்கும். மேலும் படிப்பிலும் முழு கவனம் செலுத்த முடியும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்தும் போது சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உணர்வுகளை புறக்கணித்தல்:
குழந்தைகளை உடல் ரீதியாக ஆரோக்கியமாக வைப்பது மட்டும் போதாது. மனரீதியாகவும் வலிமையாக மாற்றுவது பெற்றோரின் கடமை. ல் மேலும் குழந்தைகளின் உணர்ச்சி ரீதியான புறக்கணிப்பு அவர்களின் மனதில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர்களின் முழு நாளும் நன்றாக இருக்க அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களது உணர்ச்சிகளைப் புறக்கணிக்காமல் ஆதரவு கொடுங்கள்.
திட்டாதே!
காலையிலேயே பள்ளி செல்லும் குழந்தைகளை உரத்த குரலில் திட்டுவது அல்லது கத்துவது அவர்களுக்கு மனஅழுத்ததை ஏற்படுத்தும். மேலும் பதட்டம் மற்றும் விரக்தி ஏற்படும். எனவே காலையில் குழந்தையிடம் அன்பாக பேசி நாளை நல்ல முறையில் தொடங்க ஊக்குவிக்கவும். முக்கியமாக எந்த அர்த்தமும் இல்லாமல் குழந்தையை தீட்ட வேண்டாம்.
இதையும் படிங்க: குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க... பெற்றோர்களுக்கான 5 சூப்பர் வழிகள்
தாமதமாக எழுப்புவது:
குழந்தைகளை காலையில் எழுப்புவது கடினம் தான். ஆனால் தாமதமாக எழுப்பினால் அது உங்களுக்கும் குழந்தைக்கும் தான் சிரமம். எனவே, சீக்கிரமாக எழுப்ப பழக்கப்படுத்துங்கள்.
இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு பெற்றோர் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டிய 8 பாதுகாப்பு விஷயங்கள்!!
தேவையற்ற அறிவுரை வேண்டாம்:
குழந்தைகளுக்கு தேவையற்ற அறிவுறைகளை சொல்லுவது அவர்களை குழப்பம் அடைய செய்யும். எனவே தெளிவான மற்றும் எளிமையான முறையில் சொல்லுங்கள். இதனால் அவர்களுக்கு நாள் சிறப்பாக தொடங்கும்.
ஊக்கமளிக்க மறக்காதே!
குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை சொல்ல மறந்து விட வேண்டாம். இல்லையெனில் அவர்களது தன்னம்பிக்கை குறையும். எனவே, பள்ளி செல்லும் முன் உங்களை வார்த்தைகளை அவர்களிடம் சொல்லுங்கள். இதனால் அவர்களின் மனநிலை மாறிவிடும்.
காலை உணவு:
குழந்தைகளுக்கு காலை உணவு ரொம்பவே முக்கியம். அதுவும் குறிப்பாக சத்தான உணவு கொடுப்பது அவர்களுக்கு ஆற்றலை தருவது மட்டுமல்லாமல், படிப்பில் முழு கவனம் செலுத்த உதவும்.
விமர்சிக்காதே!
காலையிலேயே குழந்தைகளை விமர்சிப்பது அல்லது அவர்களை குறை சொல்லுவது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். அதற்கு பதிலாக குழந்தைகளிடம் நேர்மறையான விஷயங்களை சொல்லுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் அவர்களை ஊக்குவிக்கும்.