ARTICLE AD BOX
இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளை இந்த நேரத்திற்கு முன்னரும் பின்னரும் தியேட்டரில் அனுமதிக்க கூடாது என்று தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
குழந்தைகள் அதிகம் செல்போன் பயன்படுத்துவதே பலவகையான விளைவுகளை தருகிறது. சிறு வயதிலிருந்தே செல்போன் காண்பித்து பழக்கிவிடுவதால், அவர்களின் மன நிலையும் உடல் நிலையும் பாதிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சில நாடுகள் இத்தனை வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் பார்க்க கூடாது என்று உத்தரவிட்டது.
பொதுவாக முன்பெல்லாம் குழந்தைகள் படங்கள் பார்க்க மாட்டார்கள். ஆனால், இப்போது குழந்தைகள் பல படங்களை விரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் போனில் ஏற்றிப் பார்க்க ஆரம்பித்த அவர்கள், தற்போது சினிமா தியேட்டர்களிலும் நேரம் காலம் தெரியாமல் நேரத்தை செலவிடுகிறார்கள். பெற்றோர்களுடன் சென்றாலுமே, குழந்தைகளுக்கு அது பாதிப்புகளை தரும் என்றே கூற வேண்டும்.
அதுவும் நைட் ஷோ விடியற்காலை ஷோக்களில் குழந்தைகள் நேரம் செலவிடுவதால், தூக்கமின்மை போன்ற பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டுதான் தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பு, இரவு 11 மணிக்கு பின்பும் சினிமா பார்ப்பதால் தூக்கம் கெட்டு குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பும் இரவு 11 மணிக்கு பின்பும் சினிமா காட்சிகளைப் பார்க்க தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் புஷ்பா 2 பட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதனால், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இது பெரியளவில் பேசப்பட்டது. இதனையடுத்து பலரும் விரக்தி அடைந்தார்கள்.
இதனைத்தொடர்ந்து திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது விசாரிக்கும்போதுதான் சிறுவர்களின் மனநிலையையும் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.