தாத்தா பாட்டி இருப்பவங்க கொடுத்து வச்சவங்க..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

2 hours ago
ARTICLE AD BOX

தாத்தா பாட்டி இருப்பவங்க!

********😊*************☺*************👌***

 

தாத்தா பாட்டி இருப்பவங்க

கொடுத்து வச்சவங்க! -அவங்க

தாங்குவாங்க கொஞ்சுவாங்க

தங்கமானவங்க!

 

பேத்தி பேரன் சேட்டைகளைத்

தாங்கிக் கொள்வாங்க -அவங்க

பொறுமையுடன் பெருமையாகப்

பார்த்துக்கொள்வாங்க!

 

அப்பா அம்மா அடிக்க வந்தா

அதட்டி வப்பாங்க -அவங்க

அன்புடனும் பாசத்துடனும்

அரவணைப்பாங்க!

 

குடும்பத்திற்காய் உழைத்து

உழைத்து உருக்கொலைஞ்சாங்க-பேரப்

பிள்ளைகளை இருக்கும்வரை

பேணிக்காப்பாங்க!

 

ஆனா இப்போ நிலமை ரொம்ப

முத்திப் போச்சுங்க!-அவங்களை

அலட்சிமாய் அம்மா அப்பா

பாத்துக்கராங்க!

 

அங்க தொடாதே! இங்க தொடாதே!

என்று சொல்வாங்க -அவங்க

ஆவலுடன் முத்தமிட

அலுத்துக் கொள்வாங்க!

 

பென்ஷன் இல்லா தாத்தா பாட்டி

பொம்மை தானுங்க-அவங்க

பேசக்கூடத் தகுதியில்லா

டம்மிதானுங்க!

 

வசதி வாய்ப்பு இருப்பவங்க

பரவாயில்லிங்க!-அவங்க

வாழும்வரை காத்து நிற்கும்

தெய்வம் தானுங்க!

 

வீட்டிற்கொரு நூலகம் நம்

தாத்தா பாட்டிங்க!-அவங்க

நோய் நொடிகள் தீர்க்க வந்த

மருத்துவர் தாங்க!

 

அப்பா அம்மா தவறுசெய்தால்

திருத்தம் செய்வாங்க-அவங்க

வாழ்வில் மேலும் வளர்வதற்கு

வழி வகுப்பாங்க!

 

தாத்தா பாட்டியை பேரன்பேத்தி

பார்த்துக் கொள்ளணும்-அவர்களைப்

பாசத்துடன் அரவணைத்துக்

காத்து நிற்கணும்!

 

நித்தம் ஒரு கதைகேட்டு

புத்தி வளர்க்கணும்!-அவர்கள்

நீதிகளை வேதங்களாய்

நினைந்து போற்றணூம்!

 

தாத்தா பாட்டி பெருமைகொள்ள

நன்றாய்ப் படிக்கணும் -அவங்க

அன்பு மழையில் நனைந்து

நல்ல பண்பை வளர்க்கணும்!

 

முதியோர் காப்பகங்கள் மூடிவிட

சபதங் கொள்ளுவோம்!-அவர்களை

முற்றும் அன்புடனே ஆதரித்து

ஆனந்தம் கொள்வோம்!

 

தாத்தா பாட்டி இருப்வங்க

தெரிந்து கொள்ளுங்க!-அவர்கள்

தவித்திடாமல் மகிழ்ச்சியுடன்

பார்த்துக் கொள்ளுங்க!

 

காவல் தெய்வம் அவர்கள்

அன்றி வேறு யாதுங்க -அவர்கள்

காலடியைப் பணிந்து வாழ்வில்

வெற்றி கொள்ளுங்க!

 

Read Entire Article